11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த 3 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. ஓசூர் அருகே அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 அரசுப் பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர், மற்ற சிறுமிகளோடு விளையாடியுள்ளார். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே, தனது தோழியின் வீட்டுக்கு தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள்
பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

இதையடுத்து, அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில், நடந்த சம்பம் உண்மை எனத் தெரியவந்த நிலையில், 9, 10, 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் 3 மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள கூராய்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications