கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓசூரில் பெரும் பரபரப்பு.. நெடுஞ்சாலையில் திடீர் விபத்து.. கார் முழுவதும் குவியல் குவியலாக குட்கா

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சர்வீஸ் சாலையில் இருந்து மெயின் ரோட்டிற்கு திரும்பிய கார் மீது அங்கு குட்கா மூட்டைகளைக் கடத்தி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலைகீழாய் கவிழ்ந்த கார்களில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

குட்கா பொருட்களால் ஒருவருக்கு எளிதில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

A car carrying Gutka met with accident in hosur, 4 injured

இருந்தாலும் கூட சட்ட விரோதமான குட்கா விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குட்கா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காட்டும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட சபைக்கு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் குட்கா பொருட்களை எடுத்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்போதும் மாநிலத்தில் ஆங்காங்கே குட்கா விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், ஓசூரில் குட்கா பொருட்களைக் கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் பக்ருதீன் (25). இவர் தனது காரில் 5க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஐடி ஊழியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆகாஷ், வேல்முருகன் ஆகிய மூவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பத்தளப்பள்ளி என்ற இடத்தில் இவர்கள் சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குக் காரை திருப்பியுள்ளனர். அந்த சமயத்தில் ஐடி ஊழியர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது குட்கா ஏற்றி வந்த கார் வேகமாக மோதியதது.

 தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை.. ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார் தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை.. ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார்

இதில் இரண்டு கார்களும் தலைகீழாய் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான் பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    கள்ளச்சந்தையில் சரக்கு, குட்கா விற்பனை… கையும், களவுமாக சிக்கிய இருவர்

    பக்ருதீன் வந்த காரில் 100 கிலோ எடையிலான குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அரை மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    English summary
    Gutka smuggling latest news. car accidents in hosur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X