அடுத்தடுத்து ஷாக்.. கிருஷ்ணகிரி ஹாஸ்டலில் +2 மாணவன் தற்கொலை! என்ன காரணம்? பரபர விசாரணையில் போலீஸ்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் எம்.பி.சி.,ஹாஸ்டலில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியம்பூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை சம்பவங்கள்
அதே தினத்தில் அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு கால் மற்றும் விலா எலும்புகளில் கடுமையான முறிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கடந்த 30 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் பள்ளி வளாகங்களில் நடைபெற்றுள்ளது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் எம்.பி.சி.,ஹாஸ்டலில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விடுதியில் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள பரமானந்தல் தொட்டி மடுவு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன்,17, இந்த மாணவர், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பிளஸ் டூ படித்து வருகிறார். ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயங்கி வரும், எம்.பி.சி.,ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.

போலீசார் விசாரணை
இந்நிலையில் இரவு 9.30 மணி அளவில், கேபிள் வயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த, ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இறப்பிற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications