கூரியர் வண்டியில் பெட்டி பெட்டியாக தங்க நாணயங்கள்.. 5 கோடி மதிப்புள்ள தங்கத்தை பிடித்த பறக்கும் படை!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.88 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் தனியார் கூரியர் நிறுவன வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 14 பெட்டிகளில் தங்க நாணயங்கள் சிக்கியுள்ளன.
ஓசூர் டைட்டன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் இருந்து திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு இந்த தங்க நாணயங்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டன. பறிமுதல் செல்லப்பட்ட தங்க நாணயத்தின் மதிப்பு ரூபாய் 5 கோடியே 88 லட்சம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை மேற்கொண்டனர். கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய பில் இருந்துள்ளது.
மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இந்த நகைகள் ஓசூர் சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications