கொடூரத்தின் உச்சம்.. 25 நாளில் 3 பேர் ஆணவக்கொலை.. கிருஷ்ணகிரியில் என்ன நடக்கிறது?தொடரும் பயங்கரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் தற்போது மகன், தாயை ஒருவர் வெட்டி படுகொலை செய்த நிலையில் கடந்த 25 நாளில் மட்டும் அங்கு 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காதல்.. சாதி, மதங்களை கடந்து அன்பால் இருமனங்கள் இணைந்து இல்லற வாழ்க்கையில் நோக்கி பயணிப்பதற்கான முதல் புள்ளி. இருப்பினும் கூட காதலுக்கு பல குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சாதி, மதங்களை கடந்த காதல் என்றால் பலர் ஏற்பதே இல்லை.

ஆனாலும் காதல்பட்ட இதயங்கள் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை தொடங்குகின்றனர். இத்தகைய சூழலில் தான் சிலர் பெற்ற மகன், மகள் என கூட பாராமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனை இல்லாமல் புத்தி பேதலித்து ஆணவக்கொலை செய்து விடுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது ஒரு சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் இத்தகைய கொடூரமான ஆணவக்கொலைகள் சமீபத்தில் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் வெறும் 25 நாட்களிலேயே. இது சமூக ஆர்வலர்கள் உள்பட பலரையும் கொதிப்படைய செய்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரியில் கடந்த 25 நாட்களில் நடந்த ஆணவக்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ். இவர்கள் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். மகன் சுபாஷ் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்தார். இருவரும் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தோடு காதலை கைவிடும்படி கூறினார். இருப்பினும் சுபாஷ், அனுஷாவை கரம் பிடித்தார்.
இந்நிலையில் தான் நேற்று சுபாஷ் தனது மனைவி அனுஷாவுடன் அருணபதி கிராமத்தில் உள்ள பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்) வீட்டுக்கு வந்தார். அப்போது தண்டபாணி சுபாஷ், அனுஷா ஆகியோர் அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க சென்ற தாய் கண்ணம்மாவையும் வெட்டினார். இதில் சுபாஷ், கண்ணம்மா ஆகியோர் இறந்த நிலையில் அனுஷா சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஒரேநேரத்தில் மகன் சுபாஷ், தாய் கண்ணம்மாவை தண்டபாணி ஆணவக்கொலை செய்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த மாதமும் கிருஷ்ணகிரியில் ஆணவக்கொலை ஒன்று நடந்தது. அதாவது கடந்த மாதம் 21ம் தேதி
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28) என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒரே சமுதாயம் என்றாலும் கூட சரண்யாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் ஜெகனும், சரண்யாவும் காதலில் உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தனியாக வசிக்க தொடங்கினர். இருப்பினும் ஜெகன் மீது சரண்யாவின் தந்தையான சங்கருக்கு கோபம் குறையவில்லை. இதையடுத்து சங்கர் மேலும் 2 பேருடன் சேர்ந்து கேஆர்பி டேம் ரோட்டில் வைத்து கடந்த மாதம் 21ம் தேதி வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு கடந்த 25 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரியில் 3 பேர் ஆணவக்கொலைக்கு பலியாகி உள்ளனர். இந்த சம்பவங்கள் கிருஷ்ணகிரியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை வருங்காலத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications