கள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்
பெற்ற குழந்தைக்கு மதுவை ஊற்றி தந்து சரமாரியாக அடித்துள்ளார் பெற்ற தாய்
கிருஷ்ணகிரி: உச்சத்துக்கு ஏறிய நந்தினியின் காமம்.. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பெற்ற பெண் குழந்தைக்கு மதுவை ஊற்றி தந்து.. அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளார்... 3 வயது அந்த அந்த பிஞ்சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழக மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ளது பாகலூர் ஜீவா நகர்.. இங்கு வசித்து வருபவர் நந்தினி.. 6 வருடங்களுக்கு முன்பு மாதேஷ் என்பவருடன் நந்தினிக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. மூன்று வயதில் நயனா ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள்.
ஆனால், கணவனுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வசித்து வருகிறார்.. அப்போதுதான் அசோகன் என்பவருடன் நந்தினிக்கு கள்ள உறவு பற்றிக் கொண்டது. இவர்கள் 2 பேருமே தினமும் ஒன்றாகத்தான் தண்ணி அடிப்பார்களாம்.. அதன்பிறகு ஜாலியாக இருப்பார்களாம்.. அதேபோல்தான் நேற்றும் மது அருந்தி உள்ளனர்.

கள்ளக்காதல்
குழந்தை அப்போது அழுது கொண்டிருந்தது.. இதனால் எரிச்சலும், போதையும் அதிகமாகிவிட்ட கள்ளக்காதலர்கள், அந்த குழந்தைக்கு மதுவை ஊற்றியுள்ளனர்...நந்தினி மதுவை ஊற்றியும், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்பதால், அதனை சரமாரியாக அடிக்க தொடங்கி விட்டார்.. இதனால் குழந்தை மேலும் அதிகமாக கதறியது.

ஆம்புலன்ஸ்
ரொம்ப நேரமாக குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. அப்போதுதான் நடந்த கொடுமையை கண்டு அதிர்ந்து, குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்தனர்.. ஆனால் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அங்கிருந்த மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

ரத்த வாந்தி
குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.. அந்த சமயத்தில்தான் அவளது உடம்பில் பல இடங்களில் காயங்களும், தழும்புகளும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... ரத்தவாந்தியுடம் குழந்தை எடுத்திருக்கிறாள்... வெறும் மதுதான் குழந்தைக்கு ஊற்றப்பட்டதா, அல்லது விஷம் ஏதேனும் கலந்து ஊற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது.. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைந்து அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணை
குழந்தைக்கு ரத்த வாந்தி ஏற்பட காரணம் என்ன? விஷம் கலந்து தரப்பட்டதா உள்ளிட்ட கோணங்களில் ஓசூர் மகளிர் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. கள்ளக்காதலர்கள் 2 பேரும் போலீசாரின் பிடியில் இப்போது உள்ளனர்! அசோகனிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அம்மா.. அம்மா..
இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், குழந்தைக்கு, பெற்ற தாயே மதுவை ஊற்றி அடித்து கொடுமைப்படுத்தியபோதும், குழந்தை "அம்மா... அம்மா" என்று கூப்பிட்ட அழுது கொண்டே இருந்தது டாக்டர்களை மட்டுமல்லாது, சுற்றியிருந்த பொதுமக்களின் கண்களையும் குளமாக்கி விட்டது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications