சசிகலா நினைப்பது நடக்காது.. அவர் பேசுவதெல்லாம் அமமுகவினருடன்தான்- கே பி முனுசாமி
கிருஷ்ணகிரி: அதிமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் சசிகலா என்றும் அவரது எண்ணம் பலிக்காது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி இன்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்திப்பு தமிழக அரசு புதியதாக பொறுப்பு ஏற்று 24 நாட்கள் ஆகிய நிலையில் நோய்த்தொற்று பரவல் மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது அரசுக்கு உதவிடும் வகையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் புறக்கணிக்கப்படுவதாக வரும் தகவல் வேதனை அளிக்கிறது கசப்பான ஒரு தகவல் இதனை அரசு மேற்கொள்ளக் கூடாது எந்த ஒரு மாவட்டத்தையும் புறக்கணிக்காமல் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சசிகலா
அதிமுகவிற்கு சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா இந்த கட்சியிலும் இல்லை. மாறாக சிறப்பாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுகவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த கருத்திற்கு ஒரே ஒரு அதிமுக தொண்டர் கூட செவிசாய்க்க மாட்டார்.

பொறுப்பாளர்கள்
ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களை கொண்டுள்ள இந்த இயக்கம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அப்படி செல்லும் இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துக்களை சொல்கிறார்கள் அவருடைய அவர்களுடைய எண்ணம் ஈடேறாது.

போன்
சசிகலாவிடம் எந்த அதிமுக தொண்டனும் பேசவில்லை. சசிகலாதான் போன் செய்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து இதுபோல் போன் உரையாடலை கொண்டு இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நிச்சயமாக அவர்கள் ஏமாந்து விடுவார்கள்.

ஜெயலலிதா
இந்த கட்சியால் ஜெயலலிதா அவர்களால் சாதாரண நிலையில் இருந்த அந்த குடும்பம் இன்று தமிழகத்தில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக உள்ளது. அப்படி உயர்த்திய காரணமாக இருந்த ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அவர்கள் இதில் இருந்து ஒதுங்கி சசிகலா அமைதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் பழி பாவம் அனைத்தும் சசிகலாவை சாரும்.

அதிமுக
எக்காரணத்தைக் கொண்டும் அதிமுகவில் சசிகலா நுழைய முடியாது. நுழைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு அதிமுக தொண்டரும் தெளிவாக இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை வழிநடத்த தெளிவாக உள்ளார்கள். சசிகலா சொல்வதைப்போல் அதிமுகவை அவர்கள் வழக்கம் இல்லை. இந்த கட்சியை வளர்த்தவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை காப்பாற்றினார்கள்.

குடும்பம்
சசிகலா குடும்பம் ஒன்றி வந்து ஆதாயம் தேடியவர்கள் இன்னும் அந்த அதிகாரம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற அதிகார போதைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இனி அந்த வாய்ப்பே அவர்களுக்கு இருக்காது. உறுதியாக அவர்கள் அதிமுகவிற்கு நுழைய முடியாது என்று தெரிவித்தார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications