"நீ அன்புவோட பேசுறது எனக்கு தெரியும்" மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திருமணமான 7 மாதங்களாக தனது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்த கணவர், காதலுனுடேயே சேர்ந்து வாழுமாறு ஆடியோ அனுப்பிவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை அடுத்த தும்பலப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பாறையின் மேல் கடந்த 18ஆம் தேதி ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு புகார் எழுந்தது. இதையடுத்து விசாரணையில் திப்பனப்பள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் தனுஷ்குமார் என்பது தெரியவந்தது

crime krishnagiri

அவரது சடலத்தின் அருகே பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில், செல்போன் ஆகியவை இருந்தது. மேலும் தனுஷ் குமார் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்ததும் விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தார் என்பது தெரியவந்தது.

விசாரணை

விசாரணையில், தனுஷ்குமாருக்கு கடந்த 7 மாதங்களுக்கு பின்பு அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி ஒம்பலகட்டு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக விடுமுறைக்கு வந்திருந்த தனுஷ்குமார், தனது மனைவியை திப்பனப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற சென்றுவிட்டார்.

தாய் வீட்டில்

அனிதாவோ அங்கிருந்து ஒம்பலகட்டு பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று அவ்வப்போது தங்கியிருந்தார். இந்த நிலையில் புது மனைவியை பிரிந்திருந்த தனுஷ்குமார், அனிதா நினைப்பில் அவருடன் பேச போன் செய்தாராம்.

போன் லைன் பிஸி

அவர் எப்போது போன் செய்தாலும் அனிதாவின் போன் லைன் பிஸி என்றே வந்து கொண்டிருந்ததாம். அது போல் வாட்ஸ் ஆப்பிலும் அனிதாவின் ஸ்டேட்டஸ் இரவு முழுவதுமே "ஆன்லைன்" என்றே வந்து கொண்டிருந்ததாம்.

சந்தேகம்

இதனால் தனுஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தனுஷ் குமார் ஊரில் உள்ள தனது நண்பர்களிடம் மனைவி அனிதா குறித்து விசாரித்தாராம். அப்போதுதான் தனுஷ்குமார் தலையில் இடியை இறக்குவது போன்ற ஒரு விஷயத்தை கேள்விப்பட்டாராம்.

அண்ணியோட தம்பியுடன் காதல்

அதாவது அனிதாவிற்கும் அவருடைய அண்ணி கோமதியின் தம்பி அன்புவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். இந்த நிலையில் அனிதாவின் அண்ணன் சத்தியபிரகாஷுக்கும் கோமதிக்கும் நடந்த திருமணத்தின் போது அனிதாவுக்கும் அன்புவுக்கும் காதல் மலர்ந்ததாம்.

அனிதாவுக்கு மாப்பிள்ளை

இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென அனிதாவுக்கு பெண் பார்த்தனர். அப்போது அனிதாவின் சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்ததாம். ஆனால் அனிதாவின் கணக்கோ, தனுஷ் திருமணம் செய்து கொண்டு எப்படியும் ராணுவத்திற்கு சென்றுவிட்டால், நம் காதலை இங்கே தொடரலாமே என்ற திட்டம் அனிதாவுக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

6 மாதம் கழித்து வந்த கணவர்

இத்தனையையும் கேள்விப்பட்ட தனுஷ்குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் விடுப்பில் ஊருக்கு வந்திருந்தாராம். அப்போதும் 6 மாதம் கழித்து வந்திருக்கும் கணவரை அனிதா கவனிக்காமலும் சரிவர பேசாமலும் செல்போனில் அன்புவுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்தாராம்.

தீவிரமடைந்த சந்தேகம்

இதனால் தனது சந்தேகம் தீவிரமடைந்த நிலையில் தனுஷ்குமார், அனிதா இல்லாத நேரத்தில் அவரது செல்போனை ஆராய்ந்துள்ளார். அதில் அன்புவுக்கு அனிதா அனுப்பிய மெசேஜ்களை கண்டு தனுஷ் அதிர்ந்துள்ளார்.

இன்ஸ்டா அக்கவுன்ட்

அது போல் இன்ஸ்டாவிலும் ஒரு அக்கவுண்ட்டை வைத்து அதில் மெசேஜையும் வீடியோ காலையும் அனிதா செய்து வந்தது தெரியவந்தது. விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு செல்ல 2 முறை பெங்களூர் விமான நிலையத்திற்கு தனுஷ் சென்ற போதிலும், இப்படிப்பட்ட மனைவியை விட்டுச் செல்ல மனமில்லாமல் மீண்டும் வீட்டிற்கே வந்துவிட்டாராம்.

வேலை தேடிய ராணுவ வீரர்

பின்னர் "ராணுவத்திற்கு போனால்தானே இப்படி மனைவி தகாத செயல்களில் நடந்து கொள்கிறார், நாம் உள்ளூரிலேயே வேலைத் தேடி கொள்ளலாம்" என நினைத்து நண்பர்களிடம் வேலை கேட்டாராம். அனிதாவின் செயல்கள் அவரது தாய் வீட்டில் தெரிந்தும் அதை அவர்களும் கண்டிக்கவில்லையாம்.

மனமுடைந்த தனுஷ்

மனைவியும் இப்படி இருந்து, அவரது பெற்றோரும் இப்படி இருந்ததால் தனுஷ்குமார் மனமுடைந்து காணப்பட்டாராம். இதனால் கடந்த 17ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு உயிரை விட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது செல்போனில் இருந்து மனைவி அனிதாவுக்கு, தாய் பார்வதிக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாராம்.

வாய்ஸ் மெசேஜ்

அதில் "நீ உன் அண்ணியோட தம்பி அன்புவுக்கு மெசேஜ் செய்யுறது, போன் செய்து பேசுறதும் எனக்கு தெரியும். என்னால ஒன்னும் பண்ண முடியல. சரி நீ உன் லைஃப்பை பார்த்துக்கோ, என்னால நீ ஏன் கஷ்டப்பட்டுட்டு இருக்க, பத்திரமா இரு" என மெசேஜ் அனுப்பியிருந்தாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+