Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீர்த்தி வர்மாவுக்கு இன்றே லேப்டாப்.. வீடு, உறுப்பு மாற்று சிகிச்சை.. ஒரே நாளில் வாழ்க்கையே மாறுது!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு இன்றே லேப்டாப் வழங்கப்படும் என்றும் வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஒரு வார காலத்துக்குள் ஆணை வழங்கப்படும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மா பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த நிலயில், முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் சமூகவலைதள பதிவை அடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவனின் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Krishnagiri Collector Announces Laptop House for Differently-Abled Student Keerthi Verma

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்த மாணவன் கீர்த்தி வர்மா. இவர் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு கைகளையும் இழந்த மாணவன் கீர்த்தி வர்மா, படிப்பில் கெட்டிக்காரர். படங்கள் வரைவதிலும் சிறந்து விளங்குகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண் பெற்று தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கீர்த்தி வர்மா 471 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆசிரியர்களின் துணையோடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 471 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார் கீர்த்தி வர்மா. இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவன் கீர்த்தி வர்மா, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனது முயற்சியால் 471 மதிப்பெண்கள் எடுத்ததாகவும், அடுத்ததாக இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும் இரண்டு கைகளை இழந்த தனக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து, கைகளை பொருத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் எனவும், தாயின் அரவணைப்பில் வாழும் தனக்கு அரசு முன் வந்து உதவி செய்ய வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கண்ணீர் வேண்டாம் தம்பி! அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்" எனப் பதிவிட்டார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், மாணவன் கீர்த்தி வர்மாவின் வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, அவரது கோரிக்கைகளை கேட்டறிந்து உறுதி கொடுத்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். கீர்த்தி வர்மா லேப்டாப் கேட்ட நிலையில் அது இன்று மாலையே வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் பேசுகையில், "பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மா கோரிக்கையின்படி லேப்டாப் இன்று மாலைக்குள் வழங்கப்படும். வீட்டு மனைப் பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு வரும் ஒரு வார காலத்திற்குள் ஆணை வழங்கப்படும். முதலமைச்சரின் உத்தரவின்படி, உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவத்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நெகிழ்ச்சியுடன் பேசிய மாணவன் கீர்த்தி வர்மா, "கலெக்டர் அய்யா வீட்டுக்கே வந்திருக்கிறார். எனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து தருவதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைக்கு எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். முதல்வர் ஸ்டாலினுக்கும், என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி" என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+