கிருஷ்ணகிரி அங்கன்வாடி மையத்தில் படிக்கும் கலெக்டர் மகள்.. உணவு ஊட்டி, கெஞ்சி.. நெகிழ வைத்த காட்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கலெக்டர் சரயுவின் மகள் படித்து வருகிறார். அங்கு கலெக்டர் சரயு ஆய்வு செய்வதற்காக சென்ற போது, தானும் கூட வருவேன் என அவரது மகள் அடம்பிடித்தார். அப்போது கலெக்டர் சரயு தனது மகளை கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பால் உற்பத்தியாளா் கூட்டமைப்பின் இணை நிா்வாக இயக்குநராக பணியாற்றி வந்த கே.எம்.சரயு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இவா், கேரள மாநிலம், கொச்சியைச் சோ்ந்தவா் ஆவார். 1992-ஆம் ஆண்டு பிறந்த சரயு பி.டெக்., எம்.ஏ., பொது மேலாண்மை (பப்ளிக் மேனேஜ்மெண்ட்) படித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக கேடர் ஐஏஏஸ் ஆக பணிக்கு தோ்வு பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்ட சாா் ஆட்சியா், பால் உற்பத்தியாளா் கூட்டமைப்பின் இணை நிா்வாக இயக்குர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய சரயு ஐஏஎஸ், கிருஷ்ணகிரியில் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். மிகவும் எளிமையானவரான இவர், மக்களிடம் நெருங்கி பழகி குறைகளை கேட்டு வருகிறார்.. மக்களால் எளிதில் அணுகக்கூடியவராகவும் உள்ளார்.
கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட நகர் புறங்களிலும், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், ராயக்கோட்டை, தளி என கிராமப்புற மற்றும் மலையை ஒட்டிய கிராமப்புற பகுதிகளிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செல்கிறார். இவர் அடிக்கடி ஆய்வு நடத்துவதால் அதிகாரிகளே எப்போது நம்ம ஊருக்கு வருவார் என்று பரபரப்பிலேயே உள்ளார்களாம்.
இந்நிலையில் கலெக்டர் சரயுவின் மகள் நெல்லி, கிருஷ்ணகிரி ஜின்னா ரோடு பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த அங்கன்வாடி மையத்திற்கு திடீரென கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு எப்படி இருக்கிறது. அடிப்படை வசதிகள் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தார், அப்போது அம்மாவை பார்த்ததும் தானும் கூட வருவேன் என்று அவரது குழந்தை அடம் பிடித்தார்..

அப்போது தனது குழந்தையை தூக்கிய கலெக்டர் சரயு, உணவு ஊட்டிவிட்டார். பின்னர் தனக்கு வேலை இருப்பதாக கூறி கொஞ்சினார்.. பின்னர் மகளை சமாதானம் செய்து அங்குவிட்டுவிட்டு சென்றார்.. கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தனது மகளை கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications