மேடம் "அந்த" கட்சியின் நிர்வாகியாமே.. மளிகை கடைக்காரரையே "சாய்த்து".. கிருஷ்ணகிரியே கிலியில் கிடக்கு
கிருஷ்ணகிரி: வெறும் 1500 ரூபாய் ஒரு கொலை வரை கொண்டுசென்றுள்ளது.. இது தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஓசூர் அருகே உள்ளது பேகேப்பள்ளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் திம்மராஜ்.. இவருக்கு 37 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் புஷ்பா.. இவர்களுக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறார்.

மளிகை கடை: திம்மராஜ் சொந்தமாக மளிகை கடையை, அதே பகுதியில் வைத்து நடத்தி வந்தார்.. இந்நிலையில், கடந்த 5ம் தேதி சாயங்காலம், திம்மராஜ், பக்கத்திலுள்ள டீ கடைக்கு, டீ குடிப்பதற்காக சென்றார்.
அப்போது, பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்து, திம்மராஜை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர்.. இதில், திம்மராஜ் ரத்தவெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.. போலீசாருக்கு சென்ற தகவலையடுத்து, விசாரணையும் ஆரம்பமானது..
3 பேர் சரண்: அப்போது இந்த கொலை தொடர்பாக கிரண் (22), மூர்த்தி (20) ராஜ்குமார்(22) ஆகிய 3 பேருமே, கடந்த 7ம் தேதி ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்தனர்... இவர்கள் 3 பேருமே ஓசூரை சேர்ந்தவர்கள். இவர்களை தவிர, ஸ்ரீதர்(27), ராகேஷ்(27) கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த ஸ்வேதா(27), முனிராஜ்(51), முரளி(26) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக, இந்த கொலையில் அதிமுக பெண் நிர்வாகியின் பெயர் இடம்பெற்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அவர் பெயர் நாகரத்தினம்மா.. 44 வயதாகிறது.. மகளிரணி மாவட்ட செயலாளராக உள்ளார்.. இவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்..
பின்னணி தகவல்: அப்போதுதான், இந்த கொலையின் பின்னணி குறித்த தகவல் வெளியானது.. ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த நாகரத்தினம்மாவிற்கு சொந்தமான வீட்டில், சசிகுமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்தாராம்.. அவரை காலி செய்யுமாறு நாகரத்தினம்மா சொல்லிவந்துள்ளார்.. அதன்படியே, வீட்டை காலி செய்தபோது அட்வான்ஸ் பணத்தில் 1500 ரூபாயை நாகரத்தினம்மா பிடித்தம் செய்து கொண்டாராம்.
இந்த 1500 ரூபாயை, சசிக்குமார் பலமுறை நாகரத்தினம்மாவிடம் நேரிலும், போன் செய்தும் கேட்டுள்ளார்.. ஒருகட்டத்தில் 1500 ரூபாய் விவகாரம் வாக்குவாதமாக முற்றியது.. இதே 1500 ரூபாய் தகராறிலும் கொண்டுபோய் விட்டுவிட்டது. அப்போது, நாகரத்தினம்மாவை சசிக்குமார் தாக்கியதாக தெரிகிறது.. இந்த 1500 ரூபாய் விவகாரம் குறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்தனர்.. இந்த 1500 ரூபாய் குறித்து, ஓசூர் கோர்ட்டிலும் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.
சாட்சி: இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக திம்மராஜ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் நாகரத்தினம்மாவிற்கு எதிராக சாட்சி கூறியதாக தெரிகிறது. இந்த ஆத்திரத்தில் திம்மராஜை, அதிமுக பெண் நிர்வாகி நாகரத்திம்மா தீர்த்து கட்டியதாக தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
1500 ரூபாய் விவகாரம் கடைசியில் ஒரு கொலை வரை கொண்டுவந்துவிட்டுவிட்டது.. அதைவிட முக்கியமாக, இந்த கொலை வழக்கில் 3 சிறுவர்களுக்கும் தொடர்பு உள்ளதாம். அவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications