கிருஷ்ணகிரி புது மாப்பிள்ளை ஜெகன் ஆணவக் கொலை.. சரண்டரான இருவர்.. சூறையாடப்பட்ட மாமனார் வீடு.. பதற்றம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் புதுமாப்பிள்ளை கவுரவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேர் சரண் அடைந்துள்ளனர். முன்னதாக சரண் அடைந்த மாமனாரின் வீட்டை ஜெகனின் உறவினர்கள், நண்பர்கள் சிலர் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த சின்னபையன் என்பவரது மகன் ஜெகன் (வயது 25). இவர் அந்த பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஆவார். அவதானப்பட்டியை அடுத்து உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). டைல்ஸ் தொழிலாளியான ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்கள்.
இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜெகனை காதல் திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை கடந்த செவ்வாய்கிழமை அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாமனார் வீடு
மருமகனை ஆணவ கொலை செய்த சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முழுக்கான்கொட்டாயில் உள்ள சங்கரின் வீட்டிற்கு செவ்வாய்கிழமை இரவு ஜெகனின் உறவினர்கள் சென்றார்கள். அங்கு ஆணவ கொலை செய்த சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

காரசார விவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆணவக் கொலை விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே காரசார விவாதமும் நடந்தது.

சேலத்தில் சரண்
இந்நிலையில் ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நாகராஜ் (21 வயது), ஜிஞ்சுப்பள்ளியைச் சேர்ந்த முனியப்பன் மகன் முரளி (20 வயது) ஆகியோர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு சரண் அடைந்தனர்.

சரண் அடைகிறோம்
இருவரும் தாக்கல் செய்த மனுவில், எங்கள் மீது காவேரிப்பட்டினம் காவல்துறையினர் சட்டப்பிரிவு 341, 302, 506 (2), ஐபிசியின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் எங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்களை காவல்துறையினர் தேடிவருவதால், நாங்களாகவே நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளோம்.எங்கள் மனுவை ஏற்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். இதையடுத்து சரண் அடைந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications