வடமாநிலங்களை போல.. கிருஷ்ணகிரியில் 52 காலி பணியிடங்களுக்காக.. ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஷூ தயாரிப்பு நிறுவனத்தில், 52 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இன்று காலை நிறுவனத்திற்கு எதிரே ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்திருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஷூ போன்ற தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனங்களால் சுற்றுப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், இந்த வேலைகள் போதுமானதாக இல்லை. எனவே வேலைகளுக்கு அதிக அளவில் இளைஞர்களும், இளம்பெண்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் 52 காலி பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு மூலம் ஆட்கள் எடுப்பதாக அறிவிப்பு வெளியானது. கம்பெனி அமைந்திருக்கும் பகுதியை சுற்றி 8 கி.மீ பரப்பளவில் உள்ள மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அந்த வகையில் விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை நேரில் வரவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 100-200 வரை வருவார் என்று நிறுவனம் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆயிரக்கணக்கில் இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டிருக்கின்றனர்.
உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டும், வெளியூரிலிருந்து ஆட்கள் குவிந்திருந்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்த போலீசார் உடனடியாக பாதுகாப்புக்காக குவிந்தனர். வேலை தேடி வந்தவர்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறுவனம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. வேலைக்காக இளைஞர்கள் குவிந்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் இப்பிரச்சனை தலை தூக்கியிருக்கிறது. தேசிய அளவில் வேலையின்மை பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 4.2 ஆக இருப்பதாக உலக வங்கி கூறியிருக்கிறது. இது சீனாவை விட குறைவு என்றாலும், பக்கத்து நாடான பூட்டான், மியான்மர் (3.0) ஆகிய நாடுகளை விடவும், ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா (3.4), கானா (3.0), லைபிரியா (2.9), மாலி (3.1), நைஜீரியா (3.0) போன்ற நாடுகளை விடவும் இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கிறது.
சமீபத்தில் ஐடி துறையில் ஏற்பட்ட பணி நீக்கங்கள், அமெரிக்க வரி காரணமாக ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகள் இந்த வேலையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த பிரச்சனையை உடனடியாக சமாளிக்கவில்லை எனில், இலங்கையில் ஏற்பட்டதை போல இந்தியாவிலும் நெருக்கடி ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications