எம்மாடியோவ்.. தமிழ்நாட்டையே அதிரவைத்த கிருஷ்ணகிரி சம்பவம்.. தாசில்தார் வாழ்நாளில் மறக்க மாட்டார்!
கிருஷ்ணகிரி: அரிசி கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள், பறக்கும் படையின் திடீர் சோதனையில் இருந்து தப்பிக்க, தாசில்தாரின் காரில் ஜிபிஎஸ் பொருத்தி இருக்கிறார்கள். கிருஷ்ணகிரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தாசில்தாரின் கார் டிரைவர் மற்றும் அரிசி கடத்துவோர் இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா ஆந்திரா எல்லையில் உள்ள மாவட்டம் ஆகும்.இங்கு அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும். இதை தடுக்க பறக்கும்படை தாசில்தார்கள் அடிக்கடி சோதனை நடத்துவார்கள். அப்படி சோதனையில் சிக்கினால், ஜெயிலில் கம்பி தான் எண்ண வேண்டியதிருக்கும்.

இந்நிலையில் 2022 ஜூன் முதல் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் தாசில்தாராக (பறக்கும் படை) இளங்கோ (54) பணியாற்றி வருகிறார். தாசில்தார் இளங்கோ ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க, ரேஷன் கடைகளில் சோதனை செய்வதுடன், அடிக்கடி மாநில எல்லைப்பகுதிகளில் வாகன சோதனை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிக்கடி சோதனை நடத்தி கடந்த ஓராண்டில் சுமார் 200 டன் கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ கார் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பயன்பாட்டில் இல்லாத போதெல்லாம் நிறுத்தி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், அவரது வாகனத்தில் சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள ஒரு மெக்கானிக்கல் கடைக்கு பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் சென்றிருக்கிறார் தாசில்தார் இளங்கோ. அப்போது காரின் எரிபொருள் டேங்க் அருகே சிறிய ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தியிருப்பதை கண்டுபிடித்த மெக்கானிக், அந்த தகவலை தாசில்தார் இளங்கோவிடம் கூறினார்.
இதையடுத்து உடனடியாக அப்போதைய கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் இளங்கோ நடந்ததை கூறினார். இதையடுத்து கலெக்டர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸார் மற்றும் சிவில் சப்ளை சிஐடி போலீஸார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே வரை, காரில் மேலும் மூன்று ஜிபிஎஸ் டிராக்கர்கள் இருப்பதும் மெக்கானிக்கின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தாசில்தார், உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதனிடையே ஜூன் தொடக்கத்திலும் மேலும் ஒரு ஜிபிஆர் கருவி காணப்பட்டது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் முறையாக தாசில்தான் புகார் அளித்தார். இதையடுத்து ஜிபிஎஸ் கருவியை பொருத்தியவர்களை கண்டுபிடிக்க தணிப்டை அமைக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில், ஜூலை மாதம் சுப்ரமணி ஓட்டுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார், அவருக்குப் பதிலாக மற்றொரு டிரைவரையும் நியமித்தனர்.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடைய குருபரப்பள்ளி அருகே நடுசாலையைச் சேர்ந்த என்.தேவராஜ் (33) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது மொபைல் ஃபோனை பறிமுதல் செய்து விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. தாசில்தாரின் காரில் ஜிபிஎஸ் கருவிகளை கார் டிரைவரின் உதவியுடன் பொருத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தாசில்தாரின் கார் ஓட்டுநர் கே.சுப்ரமணியிடம் (59) விசாரணை நடந்து வருகிறது.
ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி தாசில்தார் கார் எந்த பகுதியில் வருகிறது என்பதை கண்டுபிடிக்க தேவராஜ் கண்காணித்து அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மற்றொரு அரிசி கடத்தல்காரரான பொன்னப்பனுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பொன்னப்பன் தலைமறைவாக உள்ளார்.
டிரைவர் சுப்பிரமணி, அரிசி கடத்தல்காரர்கள் பொன்னப்பன் மற்றும் தேவராஜ் ஆகியேர் மீது IPC 225 (மற்றொரு நபரை சட்டப்பூர்வமாக கைது செய்வதைத் தடுப்பது), 120 B (குற்றச் சதி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 72 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர் டிரைவர் சுப்பிரமணி, தேவராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், பொன்னப்பனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications