கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மலைக் கிராமத்தில் திடீர் ஆய்வு.. விறுவிறுவென 15 கிமீ நடந்தே சென்ற அமைச்சர் மா.சு.. வியப்பில் மக்கள்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் ஆய்வு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

Recommended Video

    மலைக் கிராமத்தில் திடீர் ஆய்வு.. விறுவிறுவென 15 கிமீ நடந்தே சென்ற அமைச்சர் மா.சு.. வியப்பில் மக்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார்.

    அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டசபைற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேற்றிரவு கிருஷ்ணகிரியில் உள்ள கோட்டையூர் கொல்லை என்ற மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்கினார்.

    குடி போதையில் தாறுமாறாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்... இளைஞர்கள் படுகாயம் - 4 பேர் கைது குடி போதையில் தாறுமாறாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்... இளைஞர்கள் படுகாயம் - 4 பேர் கைது

    15 கிலோமீட்டர் நடந்து சென்ற அமைச்சர்

    15 கிலோமீட்டர் நடந்து சென்ற அமைச்சர்

    இன்று காலை மூக்கனாங்கிரி என்று மலைக் கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியன், அங்குப் பொதுமக்களைக் கண்டு குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடந்தே சென்று கடமகுட்டை மற்றும் கல்லூர் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

    செயற்கை கால்

    செயற்கை கால்

    அமைச்சர் ஒருவரே நடந்து வந்து, நேரடியாகக் குறைகளைக் கேட்டறிவதைக் கண்டு அக்கிராம மக்கள் வியப்படைந்தனர். அப்போது கோட்டங்கரை என்று கிராமத்தில் இளைஞர் ஒருவர், எருது விடும் விழாவில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும் தனக்கு உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்தார். அவருக்குச் செயற்கை கால் கிடைக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் மா.சு உறுதி அளித்தார்.

    ஆம்புலன்ஸ் வசதி

    ஆம்புலன்ஸ் வசதி


    நேற்று இரவு காமகிரி என்ற கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு உள்ள மக்கள் சிகிச்சைக்காக சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் தங்கள் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு அடுத்த பத்து நாட்களில் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    மக்களைத் தேடி மருத்துவம்

    மக்களைத் தேடி மருத்துவம்

    முன்னதாக, மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதற்கு முன்னோட்டமாகத் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களின் குறைகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரடியாகக் கேட்டறிந்து வருகிறார்.

    English summary
    Ma Subramanian walked 15 kilometers in Village to hear people promblems. Ma Subramanian promoised a new scheme called Makkalai Thedi varum Maruthuvam will be intorduced next week by CM Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X