வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும் என்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும் என்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு அதிமுக, திமுக தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது.
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் கே.பி முனுசாமியை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.

என்ன கூறினார்
ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சாரத்தில், திமுக சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது. ஏற்கனவே இந்த வாக்குறுதியை பலமுறை அவர்கள் அளித்து இருக்கிறார்கள். அப்போது செலவு செய்த பணம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. அனைத்தையும் திமுகவினர் திருடி விட்டார்கள்.

வைகோ பேசினார்
வைகோ போன சட்டமன்ற தேர்தலில் கடுமையான சவால்விட்டார். திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டுதான் அவர்களுக்கு எதிராக வைகோ கூட்டணியே வைத்தார்.

ஸ்டாலின் பேச்சு
வைகோ ஸ்டாலினை வெற்றிபெற விட மாட்டேன். ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார். ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமரவிடமாட்டேன் என்று கூறினார். ஸ்டாலினை தேர்தலில் தோல்வி அடைய செய்வதே என் வேலை என்று வைகோ கூறினார்.

திமுகவுடன் கூட்டணி
ஆனால் இப்போது அதே திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார் வைகோ. அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். வைகோவிற்கு ஒரு ராசி இருக்கிறது. வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும், என்று ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications