கிருஷ்ணகிரி சுஜாதா.. எதுக்கும் அசராத இளம் மனைவி.. தலையிலேயே அடித்து கொண்ட புது மாப்பிள்ளை.. அடபாவமே

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ராம்குமார் என்ற இளைஞரை மிக கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் 26 வயதாகிறது.. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார்.. இவரது மனைவி பெயர் சுஜாதா.. சூளகிரி பகுதியை சேர்ந்த சுஜாதாவுக்கு 23 வயதாகிறது..

Krishnagiri Wife Crime

தகராறு: 11 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது.. ஆனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.. தம்பதியின் தகராறு முற்றிய நிலையில், நாகரசம்பட்டி போலீ்ஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றதாகவும், போலீசார் இதில் தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராம்குமார் திடீரென இறந்துகிடந்தார்.. அவரது தலையில் ரத்த காயங்கள் காணப்பட்டன.. அவரது கழுத்தை ஒயரால் யாரோ இறுக்கி கொன்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.. இதைப்பார்த்ததுமே கதறிதுடித்த குடும்பத்தினர், உடனடியாக நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தந்தார்கள்..

சந்தேகம்: போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராம்குமாரின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, வழக்கு பதிவு செய்து விசாரணையையும் துவங்கினர்.

அப்போதுதான், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த விவகாரம் போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் போலீசார், சுஜாதாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.. அதில் சுஜாதா சொன்ன பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

சுஜாதா: அதாவது, திருமணத்துக்கு முன்பு சுஜாதா, சூளகிரி அருகே உள்ள பீலாளம் கிராமத்தை சோ்ந்த 19 வயது கணேசன் என்பவரை காதலித்துள்ளாா்.. ஆனால், திடீரென ராம்குமாருடன் திருமணம் நடந்துள்ளது. எனினும், திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் சுஜாதா பழகிவந்ததாக தெரிகிறது.. இதனை ராம்குமாா் கண்டித்தும் சுஜாதா அவரது பேச்சை கேட்கவில்லையாம். இது தொடர்பாகவே, கல்யாணம் ஆனதிலிருந்தே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது..

தன் விருப்பத்துக்கு குறுக்கே கணவன் இருப்பதால், அவர் மீது கோபமாக இருந்துள்ளார் சுஜாதா.. அத்துடன் போலீஸ் ஸ்டேஷன்வரை விவகாரம் சென்றதால், இன்னும் ஆத்திரமடைந்த சுஜாதா, கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே கள்ளக்காதலன் கணேசன், மற்றும் மோகன் (18) ஆகியோரின் உதவியையும் கேட்டுள்ளார்.. அவர்களும் சுஜாதாவுக்காக, ராம்குமாரை கொலை செய்ய சம்மதம் சொன்னார்கள்.

ராம்குமார்: இதையடுத்து சம்பவத்தன்று இரவு, வழக்கம்போல் ராம்குமார் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார்.. அப்போது கணேசன், மோகன் ஆகியோர் சுஜாதா வீட்டிற்கு வந்து, தூங்கி கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கியிருக்கிறார்கள்.. அத்துடன், தலையிலம் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.. இதில் ராம்குமார் ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் ராம்குமார்..

இதையடுத்து, கணேசன் மோகன் இருவருமே அங்கிருந்து தப்பி சென்றநிலையில், சுஜாதா தன்னுடைய கணவன் வாயில் ரத்தகாயத்துடன் இறந்து கிடப்பதாக அழுது நாடகமாடினாராம்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, நண்பர்களுடன் கைதாகியிருக்கிறார் சுஜாதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+