சித்தி.. மாந்தோப்பில் அக்கப்போரு.. ஆனாலும் சீதாவுக்கு இத்தனை பிடிவாதமா? இப்ப பாருங்க கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி: யாரிந்த பெண் சீதா? மாந்தோப்பில் நடந்த இந்த சம்பவம் கிருஷ்ணகிரியையே உலுக்கி எடுத்துவிட்டது.. என்ன நடந்தது போச்சம்பள்ளியில்? 4 பிள்ளைகளும் கதிகலங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.
போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய கணவனை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி அடுத்துள்ளது வெள்ளிமலை என்ற பகுதி.. இங்கு வசித்து வருகிறார் சின்னமுத்து.. 40 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி. சின்னமுத்து மனைவி பெயர் சீதா.. 36 வயதாகிறது.. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் இருக்கிறார்க்ள.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதிக்கு இடையே தொடர்ந்து தகராறு இருந்து வந்துள்ளது.. எப்போதுமே சண்டையும், வாக்குவாதமுமாகவே இவர்களின் நாட்கள் கழிந்துள்ளன.
தம்பதி: கணவன் - மனைவிக்கு தகராறு வந்துவிட்டால், உறவினர்கள் முதல் அக்கம்பக்கத்தினர் வரை எல்லாரும் திரண்டு வந்து இவர்களை சமாதானம் செய்துவிட்டு போவார்களாம். ஆனால், நாளுக்கு நாள் சண்டை அதிகமாகிவிட்டதால், கணவரை விட்டு 2 வருடத்துக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார் சீதா.
தன்னுடைய குழந்தைகளுடன் செங்கழநீர்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.. சீதா தன்னைவிட்டு தனியாக பிரிந்து சென்று விட்டது, சின்னமுத்துவுக்கு பிடிக்கவில்லை.. எனவே, அடிக்கடி சீதாவுக்கு போன் செய்த சின்னமுத்து, தன்னுடன் சேர்ந்து வந்து வாழுமாறு அழைத்து வந்தார்.. சீதா அதற்கு மறுப்பு சொல்லவும், உடனே போனிலேயே தகராறு வெடிக்குமாம்.
சமாதானம்: இந்நிலையில், நேரிலேயே சீதாவை சமாதானம் செய்து அழைத்து வரலாம் என்று சின்னமுத்து, நேற்று முன்தினம் செங்கழநீர்பட்டிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால், மூக்குமுட்ட குடித்துவிட்டு போயிருக்கிறார்.
மதுபோதையிலேயே மனைவியை குடும்பம் நடத்த வரும்படியும் அழைத்துள்ளார்... ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த சீதா, குடித்துவிட்டு கணவன் தகராறு செய்யவும் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார்.. வழக்கம்போல் 2 பேருக்கும் தகராறு ஆரம்பித்துவிட்டது.
அக்கா மகன்: இறுதியில் சீதா, தன்னுடைய அக்கா மகன் வேடியப்பன் என்பவரிடம், இதை பற்றி பேசி ஒருமுடிவெடுத்து கொள்ளலாம் என்றார்.. இதைக்கேட்ட சின்னமுத்துவும், வேடியப்பனை சந்தித்து பேசுவதற்கு சம்மதம் சொன்னார்.
பிறகு, சீதாவும், சின்னமுத்துவும், வேடியப்பன் வேலை செய்யும் மாந்தோப்புக்கு சென்றிருக்கிறார்கள்.. ஆனால், அங்கு, வேடியப்பன் இல்லை... அதனால், தம்பதி இருவரும் அதே மாந்தோப்பிலேயே தங்கியிருக்கிறார்கள்.. நீண்ட நேரமாகியும் வேடியப்பன் வராததால்,, "நாம் நம்ம வீட்டுக்கு போகலாம்.. இன்னொரு நாள் வந்து வேடியப்பனை பார்த்துக்கொள்ளலாம்" என்று சின்னமுத்து சொன்னார்.
மாந்தோப்பு: ஆனால் சீதா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.. வேடியப்பன் வந்ததும் அவரிடம் பேசிவிட்டுத்தான் வருவேன் என்று அடம் பிடித்தார் சீதா.. உடனே மறுபடியும் 2 பேருக்கும் மாந்தோப்பிலேயே சண்டை வந்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சின்னமுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சீதாவின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டார்.. இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சரிந்த சீதா துடி துடித்து இறந்துவிட்டார்.. சீதாவின் சடலத்தை பார்த்ததுமே பதறிப்போன சின்னமுத்து, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அன்றைய தினம் முழுக்க வேடியப்பனும் வரவேயில்லை.
ரத்த வெள்ளம்: இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் மாந்தோப்புக்கு வேலைக்கு வந்தார் வேடியப்பன்.. அங்கே சித்தி சீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அலறினார்.. இதுகுறித்து உடனடியாக போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, சீதாவின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
ஆனால் சின்னமுத்துவை காணோம்.. தலைமறைவாக அவர் உள்ளதால், போலீசார் வலைவிரித்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதியின் 4 குழந்தைகளும், தாய், தகப்பன் இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications