ஓவர்நைட்டில் கிராமமே காலி! வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி சென்ற கிருஷ்ணகிரி மக்கள்! குழம்பிய போலீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிரமமே ஒரே நேரத்தில் திருப்பதி கோயிலுக்குச் சென்றதால் அ்நத ஒட்டுமொத்த கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.
திருமலை ஏழுமலை மீது குடிகொண்டுள்ள வள்ளலாகத்திகழ்கிறார் வெங்கடாஜலபதி, ஒவ்வொரு நாளும் தன்னை தேடி வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவர்.
ஆந்திர மாவட்டம் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற வைணவத் தலம் தான் திருப்பதி. நமது நாட்டில் உள்ள மிக முக்கிய கோயில்களில் ஒன்றான திருப்பதிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

திருப்பதி
108 திவ்விய தேசங்கள் என்று அழைக்கப்படும் கோயில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் பக்தர்கள் வைத்துக் கொண்டாடுவது இந்த திருப்பதியைத் தான். உலக புகழ்பெற்ற இந்த திருப்பதியில் இருக்கும் வெங்கடாஜலபதியின் அருளைத் தேடி வருகின்றனர். பொதுவாகத் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் திருப்பதிக்குச் செல்கின்றனர்.

பக்தர்கள்
அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் என பல்வேறு விஐபிக்களும் கூட ஏழுமலையானைத் தரிசிக்கத் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். அங்கு விஐபி தரிசனத்திற்குக் கூட சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலே உள்ளது. அதேநேரம் சாதாரண பக்தர்கள் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஏழுமலையானை தான் தரிசிக்க முடியும் என்றாலும் கூட அதைத் துளியும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருக்கவும் பக்தர்கள் தயாராகவே உள்ளனர்.

கிராமம்
ஏழுமலையானைத் தரிசித்துவிட்டால் தங்களுக்குத் துன்பம் எதுவும் நேராது என்ற நம்பிக்கை இதற்குக் காரணம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உறவினர்களுடன் பலரும் திருப்பதிக்குச் சென்று வருகின்றனர். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தினர் அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வசந்தபுரம் கிராமத்தில் சுமார் 45 குடியிருப்பு வீடுகள் உள்ளன.

ஓவர் நைட்டில்
இந்தக் கிராமத்தில் உள்ளவர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் வழக்கப்படி கிராமத்தில் இருக்கும் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு வசந்தபுரம் கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டனர். முதியவர்கள், நோயால் பாதிப்பு உள்ளானவர்கள் என வெகு சிலர் மட்டுமே இப்போது அந்த கிராமத்தில் உள்ளனர். அவர்களைத் தவிரக் கிராமத்தில் உள்ள மற்ற அனைவருமே வீடுகளைப் பூட்டிவிட்டு திருப்பதி கோயிலுக்கு ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.

பாதுகாப்பு
ஒரு சிலரைத் தவிர ஊரில் உள்ள அனைவரும் சென்றுவிட்டதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கிராமத்தில் எதாவது திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி, கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீசாரை நியமித்துள்ளார். அதேபோல் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதனும் அவ்வப்போது கிராமத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வருகிறார். ஒட்டுமொத்த ஊரும் ஒரே நேரத்தில் காலி செய்துவிட்டு திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications