கோலாலம்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சக்கட்ட பீதி.. 10 லட்சத்தை தாண்டியது கொரோனா கேஸ்கள்.. திணறும் மலேசியா..!

மலேசியாவில் 10 லட்சத்தை தாண்டியது தொற்று பாதிப்பு

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: உச்சக்கட்ட பீதியில் உள்ளது மலேசியா.. அந்த அளவுக்கு தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை அதாவது நேற்று முன்தினம் 15,902 ஆகவும், நேற்று முன்தினம் 15,573 ஆகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் தொற்று பீடித்து வரும் நிலையில் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை.. இப்போதைக்கு அங்கு லாக்டவுன் அமலில் உள்ளது..

Coronavirus positive case crosses 10 lakhs in Malaysia

ஆனாலும் அங்கு நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.. நேற்று 3வது நாளாக 17,045 கேஸ்கள் பதிவாகி கலக்கத்தை தந்துள்ளது..

கடந்த வெள்ளிக்கிழமை வரை ஒருநாளைக்கு 15,000க்கும் மேற்­பட்ட கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தன.. ஆனால், இந்த 3 நாட்களாகவே அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துவிட்டது. தலை­ந­க­ரான கோலா­லம்­பூர், அதிக மக்­கள்­தொகை உள்ள மாநி­ல­மான சிலாங்­கூர் போன்ற இடங்களில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன..

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் .. பெரிய சரிவு இல்லை.. அப்படியே தொடரும் பாதிப்பு ! தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் .. பெரிய சரிவு இல்லை.. அப்படியே தொடரும் பாதிப்பு !

கெடா மாநி­லத்­தி­லும் நேற்று ஒரேநாளில் 1,216 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.. அதாவது கடந்த 13ந்தேதி முதல் தொடா்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவே கேஸ்கள் பதிவாகி வந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது... இதனால், கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் எட்டி உள்ளது..

இந்த நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்வடைந்துள்ளது.. 92 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 7,994 ஆக உயர்வடைந்து உள்ளது... இதேபோன்று 8,44,541 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 738 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

English summary
Coronavirus positive case crosses 10 lakhs in Malaysia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X