கலர் கலர் பூஞ்சை.. குரங்கு வைரசை தொடர்ந்து.. மனிதர்களை தாக்கும் நோரோ வைரஸ்.. கலங்கும் இங்கிலாந்து!
லண்டன்: இங்கிலாந்தில் இருக்கும் பெரும்பாலான நகரங்களில் தற்போது நோரோ வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது இது என்று இங்கிலாந்து பொது சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
2019 இறுதியில் கொரோனா பரவ தொடங்கியது. அதன்பின் வரிசையாக பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை என்று கலர் கலராக பூஞ்சைகள் தாக்க தொடங்கியது. ஹப்பாடா எல்லாம் ஓவர் இனி கொரோனா மட்டும்தான் என்று நிம்மதி அடையும் போது சீனாவில் குரங்கு பி வைரஸ் என்று பழைய வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.
சீனாவில் இரண்டு குரங்குகளுக்கு சிகிச்சை பார்த்த டாக்டர் ஒருவர் இந்த குரங்கு பி வைரஸ் தாக்கி பலியாகி உள்ளார். இப்படி அடுத்தடுத்து வைரஸ்கள் வந்து மனித குலத்தை மிரட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்னொருவைரஸும் இங்கிலாந்தில் பரவ தொடங்கி உள்ளது.

எங்கு
இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பெரும்பாலான நகரங்களில் தற்போது நோரோ வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பல காலமாக இருக்கும் வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் போலவே ரைமிங்காக இருக்கும் நோரோ வைரஸும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது ஆகும். இது வயிற்றுப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த கூடியது.

வயிறு
இதை ஸ்டோமக் ஃப்ளு, வாமிட் பக், ஸ்டோமக் பக் என்றும் அழைப்பார்கள். சுத்தமில்லாத உணவு சாப்பிடுவது, அழுகிய உணவு சாப்பிடுவது, அழுக்கான தண்ணீர் குடிப்பது, மாசு படிந்த தண்ணீர் குடிப்பது, கிருமிகள் உள்ள குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் இது பரவும். நோரோ வைரஸ் தாக்கிய ஒருவர் இன்னொருவருக்கும் இந்த வைரஸை பரப்ப முடியும்.

வாய்
வாயில் கையை வைத்துவிட்டு பிறரை தொடுவது, எச்சில் மூலம் வைரஸ் துகள்கள் இன்னொருவருக்கு பரவுவது, தண்ணீரை ஒரே பாட்டிலில் குடிப்பது என்று பல்வேறு வகையில் நோரோ வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும். இங்கிலாந்தில் தற்போது நோரோ வைரஸ் தாக்குதல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

எப்படி தாக்கும்
பொதுவாக உணவுகுடலை இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ் தாக்கிய 12 - 48 மணி நேரத்தில் பொதுவாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி எடுப்பது, மயக்கமாக இருப்பது, உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படும். சிலருக்கு இந்த அறிகுறிகள் போக போக மோசம் அடையும். சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் இந்த பாதிப்பு ஏற்படும்.

வைரஸ்
இந்த வைரஸ் தாக்கத்தின் அளவை பொறுத்து வீரியம் மாறுபடும். இளைஞர்கள் பெரிதாக பாதிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் முதியவர்களும், குழந்தைகள் அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில துகள்கள் மூலமே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் ஆற்றல் கொண்டது இது. பொதுவாக நல்ல எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு நோரோ வைரஸ் சிகிச்சை இன்றி சரியாகிவிடும் என்றாலும் மற்றவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க நேரிடும்

மருந்து
உடலில் நீர் இழப்பு அதிகம் ஏற்படும். ஏற்கனவே உடலில் வேறு குறைபாடு உள்ளவர்கள் இதனால் மோசமாக பாதிப்படையும் வாய்ப்புகளும் உள்ளன. இரண்டு நாட்களில் இருந்து 1 வாரம் வரை இந்த நோரோ வைரஸ் பாதிப்பு நீடிக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்தில் அடுத்தடுத்து சிலர் நோரோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications