ஜோ பைடனை தொடர்ந்து.. இஸ்ரேலுக்கு சென்றார் ரிஷி சுனக்.. வைக்க போகும் முக்கிய டிமாண்ட் என்ன?
லண்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 13-வது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் ஒரு நிமிடம் இஸ்ரேல் அதிர்ந்து போனது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக தொடுத்தது. இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 5 முறை போர் ஏற்பட்டு இருந்தாலும் இதுவரை அல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த போரினால் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் நடத்த தயாராகி வருகிறது. இதற்கிடையே, தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டது உலகையே அதிர வைத்தது. இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஹமாஸ் அமைப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது கை காட்டியது.
இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்து உள்ள நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.
இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா உறுதி செய்யும். காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா அளிக்கும்" என்றார். இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் 13-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.
இன்று பிற்பகலில் இஸ்ரேலுக்கு சென்றடடைந்தார் ரிஷி சுனக். தொடர்ந்து அவர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் இசாக் ஹெர்சோக் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் ஒவ்வொரு உயிர் பலி போவதும் கொடூரமானது.
ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலால் பல உயிர்கள் பறி போயிருக்கின்றன" என்று கூறியிருந்தார். அதேபோல், காசாவில் மனிதாபிமான வழித்தடத்தை திறக்க வேண்டும் எனவும் காசாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து நாட்டினரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications