மனித குலமே கூட அழியும்! இன்னும் 5 வருஷம் தான் டைம்.. ஆபத்தாக உருவெடுக்கும் AI.. புது வார்னிங்
லண்டன்: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் நமக்கு மிக பெரிய நன்மைகள் இருந்தாலும் கூட இது பல சூழல்களில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்னும் 5 ஆண்டுகளில் ஏஐ என்பது மனிதர்களுக்கு இணையாக மாறும் என்றும் அப்போது மனித குலத்தையே அழிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இப்போது ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இப்போது உலகில் எங்கு பார்த்தாலும் ஏஐ தான் இருக்கிறது. சாட்ஜிபிடி தொடங்கி வைத்த இந்த ஏஐ டிரெண்ட் உலகெங்கும் பரவி வருகிறது. உலகின் பல்வேறு டாப் நிறுவனங்களும் கூட ஏஐ மீதான ஆய்வுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இப்போது அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகள் தான் டைம்
அதாவது செயற்கை நுண்ணறிவு என்பது இன்னும் 5 ஆண்டுகளில், அதாவது 2030ல் மனிதருக்கு இணையான அறிவை பெற்றதாக உருவெடுக்கும் என வல்லுர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இது மனிதகுலத்தை நிரந்தரமாக அழிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கூகிள் டீப் மைண்ட் தளத்தில் இது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில் மேலும், "ஏஐ என்பது மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அது வரும் காலத்தில் மிக பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. மனிதகுலத்தை நிரந்தரமாக அழிக்கும் ஆபத்தும் கூட இருக்கிறது. அதேநேரம் ஏஐ மூலம் ஏற்படும் மாற்றங்கள் மனித குலத்திற்கு ஆபத்தானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நாங்கள் இல்லை. சமூகமே அதன் பாதிப்புகளை தீர்மானிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கே ஆபத்து
மனித மனிதகுலத்தின் அழிவுக்கு ஏஐ வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள போதிலும், ஏஐ என்ன மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் விளக்கவில்லை. அதேநேரம் ஏஐ ஏற்படுத்தும் ஆபத்துகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் அதன் பாதிப்புகளை எப்படி குறைக்கலாம் என்பது குறித்து மட்டும் விளக்கியுள்ளனர்.
4 சிக்கல்கள்
ஏஐ மூலம் ஏற்படும் ஆபத்துகளை ஆய்வாளர்கள் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர். முதலில் ஏஐ மாடல்களை தவறாகப் பயன்படுத்துதல் (misuse), தவறான பயன்பாடு (misalignment), ஏஐ செய்யும் தவறுகள் (mistakes) மற்றும் ஏஐ மாடல்களில் உள்ள அபாயங்கள் (structural risks). ஏஐ தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தினாலே அதன் ஆபத்தை பெருமளவு குறைத்துவிடலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச அமைப்பு தேவை
முன்னதாக டீம்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் இது குறித்து கூறுகையில், "ஏஜிஐ என்பது மனிதர்களை விட புத்திசாலியாக மாறும் ஆபத்து இருக்கிறது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் இது நடக்கும் ஆபத்து அதிகமாகவே உள்ளது. உலக நாடுகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட எப்படி ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறதோ.. அதேபோல ஏஐ நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒரு அமைப்பு தேவை. இதன் மூலம் ஏஐ சார்ந்த ஆய்வுகளை முடிந்தவரை பாதுகாப்பாக மாற்ற முடியும். பாதுகாப்பற்ற திட்டங்களைக் கண்காணிக்கவும், அவற்றைக் கையாளவும் இந்த அமைப்பு தேவை என்றார்.
ஏஜிஐ
ஆய்வாளர்கள் ஏஐ மாடலின் அட்வான்ஸ்டு வெர்ஷனாக அறியப்படும் AGI- Artificial General Intelligence குறித்தே இந்த எச்சரிக்கையை கொடுத்துள்ளனர். ஏஐ என்பது பொதுவாக நாம் கொடுக்கும் டாஸ்குகளை மட்டும் செய்யும். ஆனால் ஏஜிஐ என்பது அதையும் தாண்டி வேலை செய்யும். அது நாம் சொல்லி தருவதை மனிதனைப் போலவே புரிந்து கொள்ளும். அதை புதிய புதிய விஷயங்களுக்கும் பயன்படுத்தும்.












Click it and Unblock the Notifications