2ம் உலகப்போரின் வெடிகுண்டு.. செயலிழக்க வைக்க முயன்றபோது நேர்ந்த அசம்பாவிதம்! அலறிய பிரிட்டன்
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராணுவத்தில் பணியாற்றிய வீரர் ஒருவரை அடையாளம் கண்டு இந்த குண்டு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
லண்டன்: இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க முயன்றபோது எதிர்பாராமல் அது வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் வெடிக்காமல் மீதம் இருக்கும் குண்டுகள் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் 'யார்மவுத்' நகரில் அமைந்துள்ள 'யாரே' நதிக்கு அருகில் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கு பள்ளம் தோண்டும்போது ஒப்பந்ததாரர் ஒருவர் இரும்பு போன்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு இது வெடி குண்டு என்று முதலில் தெரியாது. எனவே இதனை முழுமையாக தோண்டி பார்த்திருக்கிறார். அதன் பின்னர்தான் இது வெடி குண்டு என்பது தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அவர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க பின்னாடியே இவருடைய சக தொழிலாளர்களும் ஓடி வந்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து பார்த்துவிட்டு, இது பழைய வெடிகுண்டு இது குறித்து எங்களுக்கு அவ்வளவாக தெரியாது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து ராணுவத்தின் உதவியை நாட, ராணுவம் குண்டை ஆராய்ந்து பார்த்துவிட்டு இது பயங்கரமான குண்டு என்றும், வெடித்தால் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியது.

ஜெர்மன்
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மன்தான் இதுபோன்ற குண்டுகளை பயன்படுத்தியதாகவும், எனவே இதனை செயலிழக்க வைப்பதற்கு முன்னர் சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. இதனையடுத்து 'யாரே' நதிக்கு அருகில் சுமார் 400 மீட்டர் சுற்றளவில் இருந்தவர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு முன்னரே ராணுவம் காலி செய்ய வைத்தது. வீட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான மக்கள் அருகில் இருந்த ஷாப்பிங் மால்களிலிரும், சினிமா தியேட்டர்களிலிலும் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

பாதுகாப்பு
"இது ஒரு நம்ப முடியாத தருணம். ஆனால் பொதுமக்களை பாதுகாப்பதுதான் எங்களுக்கு முக்கியமானது. வெடிப்பின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. நாங்கள் இந்த வழியாக உள்ள அனைத்து சாலைகளையும் முடிக்கி இருக்கிறோம். வான் பறப்பில் 2000 அடிக்கும் குறைவாக ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் என எதுவும் பறக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம். அதேபோல ஏராளமான மணல் மூட்டைகளை நாங்கள் குவித்து வைத்திருந்தோம். சொல்லப்போனால் மணல் மூட்டைகளை கொண்டு சுவர் எழுப்பியிருந்தோம். ஏனெினல் இந்த குண்டு வெடித்தால் மணல் இதன் தாக்கத்தை பாதியாக குறைக்கும்.

5 குண்டுகள்
பின்னர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தீயணைப்பு துறையில் பணியாற்றிய ஆண்ட்ரூ ஃபேக்ஸ் என்பவரை அடையாளம் கண்டு அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து விவரங்களை கேட்டோம். இவருக்குதான் இந்த குண்டு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியும். இதனையடுத்து ஆண்ட்ரூ ஃபேக்ஸ் குண்டை பார்த்தவுடன் அடையாளம் கண்டுவிட்டார். இது ஒரு ஜெர்மனிய குண்டு என்றும், அதிகபட்சம் 50 மீ வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார். அதேபோல ஜெர்மனியின் விமானப்படையினர் சுமார் 5 குண்டுகளை வீசியதாகவும், இதில் நான்கு வெடித்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.

வெடிப்பு
மீதமுள்ள ஒரு குண்டு குறித்து யாருக்கும் தெரியாததால் அவர்கள் அதனை கணக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டதாக கூறினர். ஏனெனில் முன்னர் போட்ட நான்கு குண்டுகளும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்த குண்டும் வெடித்திருக்கும் என நினைத்ததாக கூறினார். இதனையடுத்து ராணுவம் தனது செயல்பாட்டில் இயங்கியது. ரோபோ கொண்டு இதனை செயலிழக்க செய்ய முயன்றது" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இப்படி எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருக்க திடீரென எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து சிதறியுள்ளது. இதனைால் ரோபோ நிலைக்குலைந்து சிதறியிருக்கிறது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் யாரே ஆற்றின் கரை சிறிது சேதமடைந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications