கால்பந்து போட்டி லைவ்வின் போது முனகல் சப்தம்.. அதிர்ந்த மைதானம்.. மன்னிப்பு கேட்ட பிபிசி நிறுவனம்
லண்டன்: கால்பந்து போட்டி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்த போது திடீரென முனகல் சப்தங்கள் ஒலித்ததற்காக பிபிசி செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
லண்டனில் உள்ள மொலினக்ஸ் மைதானத்தில் வால்வர்ஹாம்ப்டன் மற்றும் லிவர்பூல் இடையேயான கால்பந்து போட்டி நேரலை ஒளிபரப்பின்போது பெண்ணின் ஆபாச முனகல் சப்தம் கேட்டது.
அப்போது போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்த வர்ணனையாளரும் முன்னாள் கால்பந்து வீரருமான லினேகர் அந்த சப்தத்தை கேட்டு சிரித்தார். மைதானத்திலும் இந்த சப்தம் ஒலித்ததால் அதிருப்தி நிலவியது.

யூடியூபர்
அப்போதுதான் இந்த செயலை செய்தது ஒரு யூடியூபர் என தெரியவந்தது. ஜார்வோ என்ற டேனியல் ஜார்விஸ், யூடியூப் பிராங்க் ஸ்டார் ஆவார். இவர்தான் மைதானத்தில் இருக்கும் போது நேரலையில் ஆபாச சப்தங்களை ஒலிக்க செய்துள்ளார். நேரலை நடந்த ஸ்டூடியோவில் ஜார்வோ, தனது செல்போனை வைத்து அதில் ஆபாச சப்தத்தை ஒலிக்கவிட்டுள்ளார். அதோடு அந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிபிசி நிறுவனம்
இதையடுத்து பிபிசி நிறுவனம் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை பிபிசி நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். இந்த பிராங்ஸ் ஸ்டார் ஜார்வோ இதற்கு முன்னர் 5 ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று ஒரு செயலை செய்துள்ளார்.

பிபிசியில் போனை வைத்தது எப்படி
ஆனால் இந்த பிராங்க் ஸ்டார் பிபிசி ஸ்டுடியோவில் எப்படி தனது போனை வைத்தார் என்பதும் அதில் முனகல் சப்தத்தை எப்படி ஒலிக்க வைத்தார் என்பது மர்மமாகவே உள்ளது. லண்டனில் நடந்த டெஸ்ட் போட்டிகளின் போது ஓவல் மைதானத்திற்குள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவுடன் ஜார்வோ மோதல் போக்கை கையாண்டார்.

விதிகள் மீறல்
விதிகளை மீறியதாக கடந்த அக்டோபர் மாதம் ஜார்வோ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் தன்னை ஜார்வோ69 என அடையாளப்படுத்திக் கொள்வார். ஜார்வோவின் போன் எப்படி ஸ்டூடியோவுக்குள் வந்தது. இதற்கு யார் உதவினார்கள் என்பது குறித்தெல்லாம் பிபிசி நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும் தங்கள் மன்னிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications