56 வருஷம் கழித்து.. நூலக புத்தகத்தை திருப்பி கொடுத்த இங்கிலாந்து பெண்! ஆஆ! அபராதம் எவ்வளவு தெரியுமா?
புத்தகம் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் மீண்டும் திரும்ப கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். அல்லது மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும் எ
லண்டன்: தன்னுடைய 14 வயதில் நூலகத்திலிருந்து பெற்ற புத்தகத்தை 70 வயதில் மூதாட்டி ஒருவர் திரும்ப நூலகத்தில் கொடுத்திருக்கிறார். 56 ஆண்டுகளுக்கு பின்னரும் மறக்காமல் புத்தகத்தை திருப்பி கொடுத்த மூதாட்டியை நூலகத்தினர் பாராட்டியுள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் லெஸ்லி ஹாரிசன், இவருக்கு ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என பல மொழிகள் தெரியும். சிறுவயதிலிருந்தே இதற்கான ஆர்வம் இவரிடம் துளிர்விட தொடங்கிவிட்டது. முதலில் இவர் ஜெர்மன் மொழியை கற்றுள்ளார். அங்கிருந்து பிரெஞ்சு மொழி பக்கம் தாவியுள்ளார். அதில் சில இலக்கியங்களை படித்துவிட்டு ஸ்பானிஷ் மொழியை கற்றுக்கொள்ள விருப்பப்பட்டுள்ளார்.
இவையனைத்திற்கும் தொடக்கம் ஜெர்மன் மொழிதான். எனவே ஜெர்மன் மொழி வழியாக பிரெஞ்சு கற்றுக்கொள்ள முயன்றபோது இவருக்கு வயது 14. கடந்த 1966ம் ஆண்டு பள்ளி பயின்று வந்த இவர், 'விட்லி பே' இலக்கண கல்வி நிலையத்தின் நூலகத்திலிருந்து தன்னுடைய 14வது வயதில் 'நான் டச்சு கற்கிறேன்' எனும் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த புத்தகத்தின் முன் அட்டையில் நூலகத்தின் நிபந்தனைகள் எழுதப்பட்டுள்ளன.

அபராதம்
அதாவது புத்தகம் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் மீண்டும் திரும்ப கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். அல்லது மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்ட வாசகம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த பெண்மணி சுமார் 56 ஆண்டுகளாக புத்தகத்தை கொண்டு வந்தது தராமல் இருந்திருக்கிறார். இந்த 56 ஆண்டுகளுக்கு சேர்த்து அபராத தொகை கணக்கிட்டால், அபராதம் ரூ.1 லட்சத்தை தாண்டுகிறது. இப்படி இருக்கையில், இந்த புத்தகத்தை அதே நூலகத்தில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.

வீடு மாற்றம்
இது குறித்து லெஸ்லி ஹாரிசன் கூறுகையில், "நான் விட்லி பே கிராமர் பள்ளியில் ஜெர்மன் படித்துக்கொண்டிருந்தேன். ஜெர்மன் மீதான ஆர்வம் பிரரேஞ்சு மொழி மீதும் பரவியது. எனவே அதையும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் அப்போதுதான் இந்த 'நான் டச்சு கற்கிறேன்' எனும் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்தேன். ஆனால் சில நாட்களில் நாங்கள் அங்கிருந்து குடும்பத்துடன் வேறு ஒரு இடத்திற்கு குடியேறிவிட்டோம். பின்னர் இன்னும் கொஞ்ச நாள் கழித்து பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தோம். இங்கு பிரிட்டனிலேயே ஒரு சில இடங்களில் நாங்கள் வீடு மாறிவிட்டோம். இப்போது சமீபத்தில்தான் சில நாட்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தை பார்த்தேன்.

ஜெர்மன் மொழி
இதை பார்த்தபின் எனக்கு என்னுடைய பால்ய வயது நினைவு வந்தது. அப்போதே நான் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஸ் என சில மொழிகளை கற்றுக்கொண்டேன். ஆனால் நான் இங்கிலாந்தில்தான் வசித்தேன் என்பதால் எனக்கு ஜெர்மன் மொழி அதிக அளவில் பயன்படவில்லை. இப்போது ஜெர்மன் மொழியில் ஒரு சில வார்த்தைகள் மட்டும்தான் எனக்கு நினைவு இருக்கிறது. இந்த நினைவுகளோடு பழைய நூலகத்திற்கு சென்று புத்தகத்தை திருப்பி கொடுத்தேன். அதேபோல இவ்வளவு நாட்கள் தாமதமானதற்கு மன்னிப்பும் கேட்டேன். அவர்களும் பெருந்தன்மையாக என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்த வேண்டாம் என கூறிவிட்டனர்.

நூலகர்
இப்படி புத்தகத்தை சேர்த்து வைத்து நூலகராக வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த புத்தகத்தை போலவே பழமையான புத்தகங்கள் என்னிடம் நிறைய இருக்கிறது. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப கொடுத்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். 56 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்த புத்தகம் குறித்து நூலகர் கூறுகையில், "இந்த புத்தகத்தை கொடுக்கும் போது நான் இங்கு நூலகராக பணியாற்றவில்லை. ஆனால் இப்படி ஒரு புத்தகம் திரும்பி வரும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications