கொரோனா.. உடல்நிலையில் முன்னேற்றம்.. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!
லண்டன்: கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
Recommended Video
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் 26ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். அந்நாட்டில் வரிசையாக மூத்த அரசியல் தலைவர்களுக்கு கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் அந்நாட்டு பிரதமர் மாளிகையில் சுகாதாரத்துறை ஆலோசகருக்கு கொரோனா ஏற்பட்டது.
அவரை தொடர்ந்து பிரதமர் மாளிகையில் பலருக்கு கொரோனா ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா ஏற்பட்டது அந்நாட்டை பெரிய அளவில் உலுக்கி உள்ளது.

குணப்படுத்தப்பட்டார்
முதலில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட சார்ல்ஸ் தீவிர சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டார். அவரை தொடர்ந்துதான் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா ஏற்பட்டது. போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் 26ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதை அடுத்து போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா அறிகுறிகள் கொஞ்சம் தீவிரம் அடைந்தது. கடந்த வாரம் இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை
லண்டலில் இருக்கும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை அடுத்து அவர் உடல் நிலை மோசமானது. உடனே போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு மூச்சு விடுவதில் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தார். மொத்தம் 4 நாட்கள் அவர் ஐசியூவில் இருந்தார்.

குணம் அடைந்தார்
ஐசியூவில் இருந்த போரிஸ் ஜான்சனின் உடல்நிலை வேகமாக முன்னேறி வந்தது. அவருக்கு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நிலை முன்னேறியதை அடுத்து நேற்று முதல் நாள் இவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு வைத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேறிய நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இனி ஆபத்து இல்லை
அவர் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து உள்ளார். இனி அவருக்கு பிரச்சனை இல்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், செயின்ட் தாமஸ் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. அவர்களுக்கு நான் வாழ்க்கையில் பெரிய அளவில் கடன்பட்டு உள்ளேன். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்வேன், என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications