முதல் பலி.. ஓமிக்ரான் காரணமாக யு.கேவில் முதல் நபர் பலி.. மக்களுக்கு போரிஸ் ஜான்சன் கடும் வார்னிங்
லண்டன்; யு. கேவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பரவல் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. பெரிய அளவில் மரணங்கள் ஏற்படவில்லை என்றாலும் கூட கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் 38 பேரிடம் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் வேகம் காரணமாக கேஸ்கள் இன்னும் உயரும் என்ற அச்சம் உள்ளது.

ஓமிக்ரான் வேகம் '
தற்போது யு.கேவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 27ம் தேதி ஓமிக்ரான் யு.கேவில் கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கிய கேஸ்கள், தற்போது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் அங்கு பதிவான புதிய கேஸ்களில் 40 சதவிகித கேஸ்கள் ஓமிக்ரான் வகை கேஸ்கள் ஆகும். அங்கு 600க்கும் அதிகமானோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம்
ஓமிக்ரான் கொரோனா காரணமாக யு.கேவில் ஏப்ரலுக்குள் 75 ஆயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு உள்ளதாகவும் London School of Hygiene and Tropical Medicine நடத்திய ஆய்வு அறிக்கை சொல்கிறது. இந்த நிலையில்தான், யு. கேவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையில் பலியானார்.

யுகே கொரோனா மரணம்
இது தொடர்பாக யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், ஓமிக்ரான் ஆபத்தானது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஓமிக்ரான் காரணமாக மக்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருவர் தற்போது நமது நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார். இது வேண்டுமென்றால் கொஞ்சம் வலிமை குறைந்த கொரோனா வகையாக இருக்கலாம்.
Recommended Video

ஓமிக்ரான் மரணம்
ஆனால் இது பரவும் வேகத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. மக்கள் இடையே மிக அதிக வேகத்தில் ஓமிக்ரான் கொரோனா பரவி வருகிறது. இதனால் மக்கள் உடனடியாக வேக்சின் போட வேண்டும். வேக்சின் போட்டவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications