68 வயதில் 3வது திருமணம் செய்த ஹரீஷ் சால்வே.. நம்பர் 1 லாயர்! சல்மான் கானுக்கு எதிராக வாதாடியவர்
லண்டன்: மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே தனது 68 வயதில் 3ஆவது திருமணம் செய்து கொண்டார்.
நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் ஹரீஷ் சால்வே (68). இவர் 1999ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார்.

இவருக்கு மீனாட்சி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாக்ஷி, சானியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 38 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு கரோலின் பிரஸ்சார்டு என்பவரை சால்வே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதுவும் பாதியில் முடிந்துவிட்டது. இந்த நிலையில்தான் சால்வே இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் திரினா என்ற பெண்ணை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இரு தரப்பினரின் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் லலித் மோடி, அவருடைய காதலி, மாடல் அழகி உஜ்வாலா ராவத், ஸ்ரீபிரகாஷ் லோகியா, லட்சுமி மிட்டல், கோபிசந்த் இந்துஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அம்பானியின் மனைவி நீடா அம்பானியும் கலந்து கொண்டார். இவருக்கு நாட்டின் உயரிய பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இவர் பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை கையாண்டுள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றத்தால் உளவாளி என குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதிட்டார் சால்வே.
இவர் சர்வதேச நீதிமன்றத்தில் வாடியமைக்காக மத்திய அரசிடம் கட்டணமாக ரூ 1 மட்டுமே பெற்றிருந்தார். இதை மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பொதுவாக இவர் வழக்குகளுக்கு பெறும் கட்டணம் ரூ 10 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை என்கிறார்கள்.
அது போல் 2002 ஆம் ஆண்டு காரை தாறுமாறாக ஓட்டிவிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு நடிகர் சல்மான் கான் தப்பியோடிய வழக்கிலும் அவர் ஆஜராகி வாதிட்டுள்ளார். இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அது போல் டாடா குழுமத்தினர், ரிலையன்ஸ் நிறுவனம், ஐடிசி குழுமம் உள்ளிட்டோர் சால்வேவின் கிளைண்டுகள்தான்.
இவர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரீசோர்சஸ் நிறுவனத்திற்கு எதிராக கிருஷ்ணா கோதாவரி படுகை விவகாரத்திலும் சால்வே ஆஜராகியிருந்தார். இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். மிகவும் பிஸியான வழக்கறிஞராக இவர் இருந்தார். இவர் தற்போது ஜனவரி மாதம் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் அரசு குடும்பத்து வழக்கறிஞராக இருந்து வருகிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications