படுக்கை அறையில் எட்டி பார்த்த பிரபல நிறுவனம்! பலான கருவிகளில் இருந்து சீக்ரெட் டேட்டா! பகீர் சம்பவம்
லண்டன்: பிரபல நிறுவனம் ஒன்று பிரிட்டன் நாட்டில் அத்துமீறி படுக்கை அறை தகவல்களைச் சேகரித்துள்ளது. இது குறித்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதிரடி தீர்ப்பை அளித்துள்ளனர்.
வெளிநாடுகளில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் ரொம்பவே இயல்பான ஒன்றாகும். அதேபோல பலரும் திருமணம் செய்து கொள்ளாமலும் பாட்னர்கள் இல்லாமலும் இருப்பார்கள்.
இவர்கள் பல்வேறு காரணங்களால் இதுபோல சிங்கிளாகவே இருப்பார்கள். இதுபோல தனிமையில் இருப்பவர்களின் பாலியல் தேவைகளை செக்ஸ் டாய்கள் தான் பெருமளவு பூர்த்தி செய்கிறது.

பாலியல் செயல்பாடுகள்
பாலியல் செயல்பாடுகள் என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவுகளாகும். வெளிநாடுகளில் இருப்போர் சிங்கிளாக இருக்கும் போது செக்ஸ் டாய்கள் பயன்படுத்துவார்கள். இது மட்டுமின்றி பாட்னருடன் உடலுறவு கொள்ளும் போது பயன்படுத்தும் செக்ஸ் டாய்களும் இருக்கிறது. இது நமது நாட்டில் பெரியளவில் பயன்பாட்டில் இல்லை என்றாலும் வெளிநாடுகளில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டே வருகிறது. இதற்காக அங்குப் பல புகழ்பெற்ற நிறுவனங்களும் உள்ளன. அப்படியொரு நிறுவனம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அபராதம்
கனடாவைச் சேர்ந்த செக்ஸ் டாய்களை தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று தங்கள் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாகப் பிரிட்டனில் அதைப் பயன்படுத்தும் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு நடைபெற்றது. இதன் முடிவில் அந்த நிறுவனத்திற்கு 2.4 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 24 கோடி) அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இப்போது தான் தீர்ப்பு வந்துள்ளது.

என்ன வழக்கு
கனடா நாட்டை சேர்ந்த வீ பைப் (We-Vibe) என்ற நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது தனது 'ஸ்மார்ட் வைப்ரேட்டர்கள்' என்ற கருவியில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் தகவல்களை எடுத்துள்ளது. தனது தவறை ஒப்புக் கொண்ட நிறுவனம், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 6,120 பவுண்டு (ரூ. 6.17 லட்சம்) வரை நஷ்டஈடு தர முடிவு செய்துள்ளது. அவர்கள் விற்ற 90 பவுண்ட் மதிப்பிலான அந்த செக்ஸ் டாய்களை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த தொகையை நஷ்டஈடாக வழங்குவதாக வீ பைப் நிறுவனம் அறிவித்துள்ளது.

செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்
வீ வைப் 4 என்ற அந்த கருவியைச் செயலி மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். அந்த செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதால் பாலியல் தேவைகளை எளிதாகத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றே அவர்கள் விளம்பரப்படுத்தின.. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் உண்மை ஒன்று தெரிய வந்தது. அதாவது வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமலேயே அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் பாயில் செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளனர்.

என்ன தகவல்கள்
அதாவது இந்த செக்ஸ் டாயை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்துகிறார்கள், எந்த அளவு தீவிரத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற தகவல்களைச் சேகரித்துள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்கள் இதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப கருவியை மேம்படுத்தவே அவர்கள் இத்தகவல்களைச் சேகரித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. அதாவது அவர்களுக்கே தெரியாமல், அவர்களின் பாலியல் செயல்பாடுகளைக் கண்காணித்துள்ளனர். இதுவே அவர்களை இப்போது பெரிய சிக்கலில் மாட்டி விட்டுள்ளது.

விளக்கம்
உலகெங்கும் இந்த வீ-வைப் தயாரிப்புகளை சுமார் 3,00,000 பேர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் செயலி மூலம் இயக்கப்படும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் எழுந்த போது, "நாங்கள் வாடிக்கையாளர் பிரைவசி மற்றும் தரவு பாதுகாப்பைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களின் பிரைவசியை சீரியசாக எடுத்துக் கொள்கிறோம். செயலியின் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம், தகவல்களைப் பகிர்வதில் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் ஆப்ஷனை வழங்கியுள்ளோம்" என்று கூறியிருந்தனர்.

ஏற்கவில்லை
இருப்பினும், இந்த வாதத்தை அதன் வாடிக்கையாளர்கள் ஏற்பதாக இல்லை. எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், இப்படித் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது ஆபத்தானது மற்றும் பயங்கரமானது என்றே தெரிவித்துள்ளனர். தங்கள் கருவிகளை மேம்படுத்த மட்டுமே தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அவர்கள் சொன்னதை வாடிக்கையாளர்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே நஷ்டஈடு தர அந்நிறுவனம் சம்மதித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications