லண்டனில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு - அவமதிப்பு.. விஷமிகள் சதி வேலை.. இந்தியர்கள் கொதிப்பு
லண்டன்: லண்டனில் ‛மகாத்மா காந்தி' படித்த லண்டன் பல்கலைகழகத்தின் அருகே அவரது வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இங்கு பலரும் அவருக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். இப்படியான சூழலில் தான் அந்த சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் கொதித்துள்ளனர்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. நம் நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கு அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியின் பிறந்தநாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காந்தி பிறந்தநாள் ஐநாவில் சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்திக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே பாக்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் பிரிட்டனில் காந்தி சிலைக்கு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு என்ன நடந்தது? என்பது பார்க்கலாம்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் டாவிஸ்டாக் சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தில் ‛தேசப்பிதா' மகாத்மா காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிற்ப கலைஞர் ஃப்ரெடா பிரியண்ட் என்பவர் இந்த சிலையை உருவாக்கி இருந்தார்.
இந்த மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி லண்டனில் சட்டப்படிப்பை முடித்தார். அதனை நினைவுக்கூறும் வகையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் அருகே இந்த சிலை அமைக்கப்பட்டது. சிலையின் கல்வெட்டில் மகாத்மா காந்தி 1869 - 1948 என அவரது வாழ்ந்த ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காந்தி ஜெயந்தி தினத்திலும் இந்த சிலைக்கு மலர் தூவி காந்திக்கு மரியாதை செலுத்தப்படும். இந்நிலையில் தான் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. யாரோ மர்மநபர்கள் காந்தி சிலையை அவமதிக்கும் வகையிலான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்துக்கு நம் நாட்டின் தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல் வெட்கக்கேடானது. அகிம்சை மீதான தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் சார்பில், ‛‛லண்டனில் உள்ள டாவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலை நினைத்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் கவலை கொள்கிறது. இந்த செயலை கண்டிக்கிறது.
இது வெறும் நாசவேலை மட்டுமல்ல. சர்வதேச அகிம்சை தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு, அகிம்சை கருத்தை வலியுறுத்திய மகாத்மாவின் மீதான வன்முறைத் தாக்குதலாகும். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளிடம் எடுத்து கூறியுள்ளோம். எங்கள் குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது. மகாத்மா காந்தியின் சிலையை கண்ணியத்துக்கு குறைவின்றி மீண்டும் மீட்டெடுக்க செயல்பட்டு வருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ பாலிட்டன் போலீஸ் மற்றும் லோக்கலில் உள்ள Camden Council சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications