UK-India Week 2023.. இளம் தலைவர்களுக்கான பெல்லோஷிப்.. லண்டனில் பிரம்மாண்டம்.. அண்ணாமலை பங்கேற்பு
லண்டன்: தற்போதைய தலைமுறையினர் தொழில்முனைவோராக வரவேண்டும். ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை விட முயற்சி செய்த தொழிலதிபராக முயற்சியுங்கள் என்று நுவாமா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான கெளதம் ஷ்ராஃப் பேசியுள்ளார். இந்தியா குளோபல் ஃபோரத்தின் UK-India Week 2023 நிகழ்வு லண்டனில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வை இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 150 பேர் சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்கின்றனர்.
கடந்த 24ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. லண்டனில் உள்ள நேரு மையத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடகரும், பாடலாசிரியருமான அர்மான் மாலிக் சிறப்புரையாற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியில், இளம் தலைவர்களுக்கான பெல்லோஷிப்பை இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) நிறுவனரும் தலைவருமான மனோஜ் லத்வா தொடங்கி வைத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர், "இங்கிலாந்தில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தியா குளோபல் ஃபோரத்துடன் இணைந்து பணியாற்ற, 'இளம் தலைவர்கள் பெல்லோஷிப் திட்டம்' ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மாணவர்களுக்கு நடைமுறை பணி அனுபவம், தலைமைத்துவ பண்பை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை இது உருவாக்குகிறது. மாற்றத்தை ஏற்படுத்துவதில் உறுதியாக இருப்பவர்களுக்குதான் எதிர்காலம் சொந்தமாக இருக்கும்.
அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுவதற்கும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் மற்றும் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் UK-India Week 2023 ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கும். இவரைத் தொடர்ந்து பேசிய அர்மான் மாலிக், "மனித உணர்வுகளையும், நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதையும் மாற்ற முடியும் என்பதை நான் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இதை செயற்கை நுண்ணறிவு (AI) சாத்தியமாக்கியுள்ளது. ஆனால் AI கூட செய்ய முடியாத, கடத்த முடியாத சில உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கின்றன.
அவற்றை இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் சில வார்த்தைகளில் எழுதிவிட்டு கடந்துவிடுகிறார்கள். புதியதாக பாடல்களை எழுதவும், இசையமைக்கவும் பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த செயற்கை நுண்ணறிவு முழு பாடல் எழுதும் கலையை மாற்றிவிடக்கூடாது என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Throwing light on the UK-India relations during the IGF Young Leaders Forum, @annamalai_k, State President of India's @BJP4TamilNadu said, "This partnership is a deep and cultural one, able to stand the test of time”
— India Global Forum (@IGFupdates) June 25, 2023
Join the Conversation at #UKIndiaWeek:https://t.co/wq3alwIYsu pic.twitter.com/uxNm1ws83S
இவரைத் தொடர்ந்து பேசிய நுவாமா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான கெளதம் ஷ்ராஃப், "தற்போதைய தலைமுறையினர் தொழில்முனைவோராக வரவேண்டும். ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை விட முயற்சி செய்த தொழிலதிபராக முயற்சியுங்கள். இதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கின்றன. முன்பு இப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார். 6 நாட்கள், 12 அமர்வுகள், 150 பேச்சாளர்கள், 2000 பங்கேற்பாளர்கள் என இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications