ராயல் புல்வெளியில் "அந்த" உறுப்பு! அதுவும் மெகா சைஸில்.. சார்லஸ் முடிசூட்டு விழாவில் பெரும் பரபரப்பு
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழா நடந்த நிலையில், அங்குள்ள ராயல் கிரசண்ட் புல்வெளியில் மிக மோசமான சம்பவம் ஒன்று அரங்கேறியது.
பிரிட்டன் நாட்டின் புதிய மன்னராக இன்று சார்லஸ் பதவியேற்றார். பிரிட்டன் பல ஆண்டுகளுக்கு முன்னரே, முடியாட்சியை விட்டுவிட்டு ஜனநாயக முறைக்குத் திரும்பிவிட்டது. அங்கே பிரதமரே அரசின் தலைவராக உள்ளார்.
இருந்த போதிலும், அங்குள்ள அரச குடும்பத்திற்குத் தனி மரியாதை இருந்து கொண்டே தான் இருக்கும். அரச குடும்பம் அரசியலில் தலையிடாது என்ற போதிலும், முடியாட்சியும் அங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.

முடிசூட்டு விழா: பிரிட்டன் நாட்டின் தலைமை பொறுப்பில் கடந்த 70 ஆண்டுகளாக ராணி எலிசபெத் தான் இருந்தார். கடந்தாண்டு வயது மூப்பு காரணமாக ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், அவருக்கு அடுத்து சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், அவருக்கு முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் இன்று அவருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.
இந்த மன்னர் முடிசூட்டு விழாவை ஒட்டுமொத்தமாகப் பிரிட்டன் நாடே கோலாகலமாகக் கொண்டாடியது. மன்னர் முடிசூட்டு விழாவைப் பலரும் கொண்டாடிய போதிலும் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்தனர். பிரிட்டன் அரச குடும்பத்தின் கடந்த கால வன்முறை வரலாற்றை மறைத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவதாகவும் இதை அனுமதிக்க முடியாது என்றும் சிலர் தெரிவித்தனர்.

மோசமான சம்பவம்: சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக, அங்குள்ள புகழ்பெற்ற மைதானம் ஒன்று ஆண்குறி வடிவில் கட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முடிசூட்டு விழாவிற்கான இடமான பாத்ஸ் ராயல் கிரசண்டில் தான் இதுபோல செடிகள் கட் செய்யப்பட்டது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா நடந்த நிலையில், அங்கே சிலர் குறும்புத்தனமாக இதுபோல அந்த மைதானத்தைக் கட் செய்துள்ளனர்.
மன்னர் முடிசூட்டு விழா இன்று நடந்த நிலையில், அதன் பின்னர் ராணி கமிலா முடிசூட்டு விழாவும் நடைபெறுகிறது. கமிலா ராணியாக முடிசூட்டப்பட உள்ளார். மன்னர் சார்லஸுக்கு நடைபெறுவதைப் போலவே இந்த விழாவும் நடைபெறும் என்ற போதிலும் ஒப்பீட்டளவில் இது சுற்று சிம்பிளாகவே இருக்கும்.

பரபரப்பு: சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு 1957இல் ராணி எலிசபெத் முடிசூட்டினார். அதன் பிறகு இப்போது தான் பிரிட்டனில் முடிசூட்டு விழா நடக்கிறது. இப்படியொரு முக்கிய நிகழ்வில் ராயல் கிரசண்ட் புல்வெளியில் 30 அடிக்கு ஆண்குறி போலக் கட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முடிசூட்டு விழா நடக்கும் ராயல் கிரசண்ட் இங்கிலாந்தின் பாத் நகரில் உள்ள 30 மாடி வீடுகளின் சின்னமாகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இது பிரிட்டனில் ஜார்ஜிய கட்டிடக் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது..
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்த உலகமே எதிர்பார்க்கும் இந்த விழாவில் தான் புல்வெளி இப்படி மோசமான உருவத்தில் கட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் சாடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications