அடேங்கப்பா.. பிரிட்டன் மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? அசந்தே போயிடுவீங்க
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த 2ம் எலிசபெத் காலமானதை அடுத்து பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மகன் 3ம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடிசூட்டி கொள்கிறார். இதனால், பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரிட்டன் மன்னரான அவரது சொத்து மதிப்பு வருமானம் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி 2ம் எலிசபெத். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 96-வது வயதில் உயிரிழந்தார். அதன்பிறகு ராணி 2 ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னரானார். 3 ஆம் சார்லஸ் என்று அழைக்கப்படும் அவருக்கு முடிசூட்டும் விழா இன்று நடைபெறுகிறது.

பிரிட்டனில் 70 ஆண்டுகள் கழித்து தற்போது முடிசூட்டு விழா நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக இந்த விழா நடைபெறுகிறது. மொத்த பிரிட்டனும் விழாக்கோலம் பூண்டுள்ளது என்று சொல்லும் அளவுக்கு அங்கு உற்சாகம் காணப்படுகிறது.
இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்தவுடன் முடிசூட்டு விழா தொடங்குகிறது. இந்த விழாவை மிகவும் கோலாகலமாக நடத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா சார்பில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். அதேபோல் இவ்விழாவில் அமெரிக்காவின் சார்பில் அதிபர் ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்கிறார். இப்படி மன்னரின் முடி சூட்டு விழா ஒரு பெரும் திருவிழா போல அந்நாட்டில் இன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பிரிட்டன் மன்னரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.
1990 ஆம் ஆண்டு சார்லஸ் பிஸ்கட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். பிறகு இது பிற பொருட்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக விரிவு படுத்தப்பட்டது. இதன் உற்பத்தி பொருட்கள் பிரத்யேகமாக அங்குள்ள Waitrose சூப்பர் மார்க்கெட்டில் மட்டுமே விற்அனை செய்யப்பட்டது. இந்த பிராண்டின் கடந்த ஆண்டு வருமானம் 4 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த தொகை முழுவதும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. அதேபோல ட்ச்சி ஆப் கார்ன்வால் எஸ்டேட் கட்டுப்பாடும் மன்னர் வாரிசு என்ற அடிப்படையில் சார்லஸ் வசமே இருக்கும். இதன் மதிப்பு மட்டும் 1.3 பில்லியன் டாலர் என்று வால்ஸ் ஸ்டீரிட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் சுமார் 1,30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இது உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இதன் நிகர மதிப்பு மேலும் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த எஸ்டேட்டில் இருந்து சார்லஸ்க்கு 28.3 மில்லியன் டாலர் வருமானம் கடந்த ஆண்டு வந்துள்ளது. இது போக 800 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட தி டச்சி ஆஃப் லாங்காஸ்டரும் சார்லஸ்க்கு சொந்தமாக உள்ளது. இது 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வணிக, விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளைக் கொண்டது.
இதன் மூலம் கிடைக்கும் பணம் அரச குடும்பத்திற்கு தனிப்பட்ட வருமானமாக செல்கிறது. மன்னர் சார்லஸ் தனது வருமானத்திற்கு எதுவும் வரி கட்ட தேவையில்லை. எனினும் தனது தாயாரும் ராணி 2 ஆம் எலிசபெத்தை பின்பற்றி சார்லஸ் வருமான வரி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோக பிரிட்டன் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும் இறையாண்மை கிராண்ட் எனப்படும் வரி செலுத்துவோர் மூலம் வருமானம் கிடைக்கும். இந்த வரியானது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications