தங்கமா? 700 ஆண்டு பொக்கிஷம்.. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டிய சிம்மாசனம்! இத்தனை சிறப்புகளா?
லண்டன்: இங்கிலாந்து மகாராணி 2 ஆம் எலிசபெத்தை தொடர்ந்து அந்நாட்டு மன்னராக பதவியேற்றுக்கொண்ட அவரது மகன் மூன்றாவது சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா நடைபெற்ற நிலையில் அதற்காக பயன்படுத்தப்பட்ட சிம்மாசனத்திற்குள் புதைந்து கிடக்கும் அரிய தகவல்களை பார்ப்போம்.
இங்கிலாந்தின் ராணியாக பல ஆண்டு காலமாக பதவியில் இருந்தவர் 2 ஆம் எலிசபெத். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது 93 வது வயதில் காலமானார். அவரது மகன் 3 ஆம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக கடந்த ஆண்டு பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாவது சார்லஸ் முடிசூடிக்கொள்ளும் விழா நடைபெற்றது.

முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக லண்டலில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த விழா விமரிசையாக நடந்து முடிந்து இருக்கிறது. இந்த முடிசூட்டு விழா புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதில் சார்லஸ் அமர்ந்து இருக்கும் சிம்மாசனம் பலரது கண்களையும் கவர்ந்து இருக்கும்.
இங்கிலாந்தின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் விழாவில் 700 ஆண்டுகள் பழமையான தங்க முழாம் பூசப்பட்ட சிம்மாசனம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 1308 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர்கள் முடிசூட்டு விழாவிற்காக இந்த சிம்மாசனத்தை தயார் செய்து இருக்கிறார்கள்.
கடந்த 1399 ஆம் ஆண்டு இந்த சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டுதான் இங்கிலாந்தின் முன்னாள் அரசர் ஹென்றி மன்னராக முடிசூட்டிக் கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புகள் நிறைந்த இந்த சிம்மாசனம் கடந்த 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சிம்மாசனத்தின் அடித்தளத்தை மாற்றி அமைத்து இருக்கின்றனர்.
இந்த சிம்மானத்தின் கால் பகுதியில் இரு பக்கங்களிலும் சிங்கங்களின் உருவங்கள் இருக்கின்றன. இன்று நடைபெற்ற 3 ஆம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த வரலாற்று பெருமைமிகுந்த சிம்மாசனத்தையே பயன்படுத்த அரச குடும்பம் விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த சிம்மாசனத்தை முடிசூட்டு விழாவுக்காக புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன.
இந்த சிம்மாசனத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய முடிசூட்டு விழாவின்போது அதில் சார்ஸ்லஸ் அமரவைக்கப்பட்டு அவரது தலையில் இங்கிலாந்து மன்னருக்கான கிரீடம் வைக்கப்பட்டது. பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஸ்காட்லாந்து அரண்மனையில் உயிரிழந்த 2ம் ஆம் எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வேண்டிய சில நாட்கள் அங்கு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டரில் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல நாடுகளில் தலைவர்கள் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த நிலையில் இன்று எலிசபெத் ராணி மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications