மனைவியை 200 பீஸ்களாக வெட்டி.. செல்ல நாயை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற கொடூரன்.. நெஞ்சு பதறுதே!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டில் மனைவியைக் கொலை செய்து சுமார் 200+ பாகங்களாக அதை வெட்டி வீசிய கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் மிகவும் கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அங்கே 28 வயது இளைஞன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளான்.

Man killed and Then Cuts Her Into 200 Pieces Netizens shockedv

இது மட்டுமின்றி அவளுடைய உடலை 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டியுள்ளான். அதை ஒரு வாரம் தனது வீட்டுச் சமையலறையில் வைத்த அந்த நபர், தனது நண்பரின் உதவியுடன் அதை ஆற்றில் வீசியுள்ளான்.

கொலை: நிக்கோலஸ் மெட்சன் என்ற அந்த 28 வயது இளைஞன் தான் இந்த கொடூரத்தில் ஈடுபட்டுள்ளான். அவன் தனது மனைவி ஹோலி பிராம்லியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். போலீசார் விசாரணையில் தொடக்கத்தில் அவன் தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்தே வந்துள்ளான். போலீஸ் விசாரணைக்கு வந்த போது கூட அவர்களிடம் காமெடி எல்லாம் செய்து தன் மீது குற்றம் இல்லை என்பதையே காட்ட முயன்றுள்ளார்.

என்ன நடந்தது: மெட்சன் தனது மனைவியைப் படுக்கையறையில் பலமுறை கத்தியால் குத்தி கொன்றுள்ளான். அதன் பிறகு உடலைக் குளியலறைக்கு எடுத்துச் சென்ற அவன், உடலைத் துண்டு துண்டாக 200 பீஸ்களாக வெட்டியுள்ளார். பின்னர் அந்தத் துண்டுகளை பிளாஸ்டிக் பைகளில் போட்டு, அதைச் சமையலறையில் உள்ள பிரிட்ஜில் சேமித்து வைத்துள்ளான். ஒரு வாரம் அப்படியே உடல் பாகங்களை வைத்துள்ளான்.

ஆற்றில் வீசப்பட்ட உடல்: பிறகுத் தனது நண்பனை அழைத்த அந்த கொடூரன் 50 பவுண்டு கொடுத்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறான். இருவரும் சேர்ந்து உடல் பாகங்களை அருகே உள்ள விடம் ஆற்றில் வீசியுள்ளனர். மறுநாள் அந்த விடம் ஆற்றில் பிளாஸ்டிக் பைகள் மிதப்பதை அப்பகுதியில் வாக்கிங் சென்றவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் உடல் பாகங்கள் இருந்ததால் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், டைவர்கள் உதவியுடன் அந்த உடல் பாகங்களை மீட்டுள்ளனர். மொத்தம் 224 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதிலும் கூட சில பாகங்கள் மிஸ் ஆவதாக போலீசாார் கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காகவே உடலை இப்படி 200+ பீஸ்களாக அந்த கொடூரன் வெட்டி வீசியுள்ளான்.

தாயார் கண்ணீர்: இது குறித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், "எனது மகளுக்கு 16 மாதங்களே ஆகிறது. எனது மகள் என்னையும் எங்கள் குடும்பத்தையும் சந்திக்க அந்த சைகோ அனுமதிக்கவே இல்லை. அந்த சைக்கோவின் டார்ச்சர் தாங்க முடியாமல்.. அவனை விட்டுப் பிரிந்துவிட எனது மகள் முடிவு செய்திருந்தாள். ஆனால், அதற்குள் அவன் இந்த கொடூரத்தைச் செய்துவிட்டான்" என்றார்.

தனது மனைவியைக் கொலை செய்த அந்த கொடூரன் பிறகு கூகுளில், "மனைவி இறந்துவிட்டால் எனக்கு என்ன பலன்கள் கிடைக்கும்" என்றும் "இறந்தவர்களால் பழி வாங்க முடியுமா?" உள்ளிட்ட கேள்விகளை கூகுள் செய்து பார்த்துள்ளான். போலீசார் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்களும் கூட தெரிய வந்துள்ளது.

கொடூரம்: அந்த சைக்கோ நிக்கோலஸ் மெட்சன் தனது மனைவியை பல்வேறு வகையில் டார்ச்சர் செய்துள்ளார். ஒரு முறை மனைவி பிராம்லி வீட்டில் வளர்க்கும் எலியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். அவரை பிடித்து இழுத்து வந்த மெட்சன், எலியைக் கண் முன்னாலேயே மிக்ஸியில் போட்டு அரைத்துள்ளான். அதன் பிறகு மைக்ரோவேவ் அடுப்பில் வைத்துச் சமைத்துள்ளான். மற்றொரு முறை வீட்டில் வாங்கிய நாய்க் குட்டியை அந்த சைக்கோ வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்றுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+