இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்.. ஏன் முக்கியம்
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையே நீண்ட காலம் நல்லுறவு பேணப்பட்டு வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது லண்டன் பயணத்தின்போது அவர் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே நீண்ட காலம் நல்லுறவு பேணப்பட்டு வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்
நேற்று அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது லண்டன் பயணத்தின்போது அவர் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து பயணம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில், 'இந்தியாவும், இங்கிலாந்தும் விரிவான உறவுகளை பகிர்ந்து வருகின்றன. இது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பானது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது' என்று கூறியிருந்தார்.
ஒப்பந்தம் கையெழுத்து
பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய அம்சமாக, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இரு நாடுகளும் 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியதன் இறுதியில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இங்கிலாந்துக்கு 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி இருக்காது. இங்கிலாந்து நிறுவனங்கள் விஸ்கி, கார் மற்றும் இதர பொருட்களை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யும். இங்கிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அங்கிருந்து மாலத்தீவு செல்கிறார்.
மாலத்தீவு செல்கிறார் மோடி
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அழைப்பின்பேரில் 25, 26-ந் தேதிகளில் அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார். மாலத்தீவு நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்கிறார். மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து இந்தியாவுக்கும் அந்நாட்டிற்குமான உறவில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிபராக இருக்க கூடிய முகமது முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படுகிறார்.
இதனால், இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை முகம்மது முய்சு அரசு எடுத்தது. இதற்கு மத்தியில் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து இன ரீதியாக மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. அதன்பிறகு சமீப காலமாக இந்தியாவுடன் இணக்காமான போக்கை மாலத்தீவு கடைப்பிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications