சரித்திரம் படைத்த ரிஷி சுனக்! பிரதமராக நியமித்த மன்னர் சார்லஸ்! 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல்முறை
லண்டன்: பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்கை அந்நாட்டு மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக நியமித்து உள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் அறிவித்த வரி குறைப்பு நெகடிவ் விளைவுகளை ஏற்படுத்தியது. அந்நாட்டின் பொருளாதாரம் தடுமாறத் தொடங்கியது.
இதன் காரணமாக இரு அமைச்சர்கள் அடுத்தடுத்து பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகினர். இதனால் அழுத்தம் அதிகரித்த நிலையில், லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

பிரிட்டன்
இதையடுத்து பிரிட்டன் பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி ஏற்பட்டது. ரிஷி சுனக்கிற்கு 140 எம்பிகளின் ஆதரவு இருந்தது. போரிஸ் ஜான்சன் இதில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் விலகினார். ரிஷி சுனக்கை தவிர வேறு யாருக்கும் அங்கு 100க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ரிஷி சுனக் பிரதமராவது உறுதியானது.

பிரதமராக நியமனம்
அந்நாட்டின் சட்டப்படி யார் ஆளும் கட்சியின் தலைவராக உள்ளாரோ அவர் தான் பிரிட்டன் பிரதமராக இருக்க முடியும். பல கருத்துள்ளவர்களைக் கொண்ட ஆளும் கன்சரவ்வேடிவ் கட்சியை வழிநடத்துவதே கடினமான ஒரு காரியம். அதைச் செய்ய ரிஷி சுனக்கே சரியான நபர் என்று அந்நாட்டு எம்பிகள் நம்புகின்றனர். இந்தச் சூழலில் அவரை பிரிட்டன் பிரதமராக மன்னர் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக நியமித்தார்.

முதல்முறை
இந்த நிகழ்வு லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது. மேலும், பிரிட்டனில் ஆட்சி அமைக்குமாறும் அழைப்பு விடுத்தார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் நாட்டில் பிரதமராவது இதுவே முதல்முறையாகும். இது தவிர அவர் பல சிறப்புகளையும் பெற்று உள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் மிகக் குறைந்த வயதில் பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்ற நபர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

பொருளாதார பிரச்சினை
இளவரசர் சார்லஸை சந்தித்துவிட்டுத் திரும்பும் போது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், "நமது நாடு இப்போது ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போர் உலக சந்தைகளைச் சீர்குலைத்துள்ளது... முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸும் கூட நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தவே முயன்றார். அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன்.

சரி செய்வோம்
ஆனால் சில தவறுகள் நடந்தன. தவறான எண்ணம் எதுவும் இல்லை.. ஆனால் நடைமுறைப்படுத்துவதில் தான் தவறுகள் இருந்தன. அதையெல்லாம் சரி செய்துவிட்டு பிரிட்டன் இப்போது வேகமாக வளர்ச்சியை விரைவில் அடையும்" என்றார். மிக விரைவில் அவர் தனது புதிய அமைச்சர்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அடுத்து 2025 ஜனவரி மாதம் தான் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்முறை
பிரிட்டன் மக்களாட்சி முறைக்குத் திரும்பிய போதிலும், அங்குப் பிரதமரை எப்போதும் அரசு குடும்பத்திற்குத் தலைமை தாங்குபவரே நியமிப்பார். அதன்படி இத்தனை ஆண்டுகளாக ராணி எலிதபெத் தான் பிரிட்டன் பிரதமர்களை நியமித்தார். அவர் மறைய சில நாட்களுக்கு முன்பு தான் லிஸ் டிரஸை பிரிட்டன் பிரதமராக நியமித்தார். இதனிடையே மன்னர் சார்லஸ் முதல்முறையாக ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்து உள்ளார்












Click it and Unblock the Notifications