கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைதல்! வேக்சின் போட்டவர்கள் கவலைப்பட வேண்டுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன
லண்டன்: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் போன்ற அரிய பக்க விளைவுகள் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இன்று தனது கொரோனா தடுப்பூசி குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் முக்கிய ரிப்போர்ட்டை தாக்கல் செய்துள்ளது.

அதில் தங்கள் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்ட வெகு சிலருக்கு மட்டும் TTS, அதாவது ரத்த உறைதல் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது. தனது தடுப்பூசி இந்த பக்கவிளைவை ஏற்படுத்தும் என்பதை அஸ்ட்ராஜெனெகா ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.
ரத்தம் உறைவது: TTS அதாவது த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் என்பது ரத்தத்தை உறைய வைத்துவிடும். மேலும், அவை ரத்த பேளட்லெட்கள் எண்ணிக்கையும் குறைக்கும் ஆபத்து இருக்கிறது. இது தொடர்பாக பிரிட்டன் நாட்டில் மொத்தம் 51 பேர் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கொரோனா சமயத்தில் இந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா வேக்சின் தான் பல கோடி பேருக்குச் செலுத்தப்பட்டது. இந்தியாவிலும் இது தான் கோவிஷீல்ட் என்று பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் தங்களுக்குத் தடுப்பூசியைப் போட்டதால் தங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என அஞ்சுகிறார்கள். இது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா இல்லை அப்படி எதுவும் நடக்காதா என்பதை நாம் பார்க்கலாம்.
மருத்துவர்கள் விளக்கம்: இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாக எந்தவொரு தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவுகள் என்பது வேக்சின் போட்டு சில வாரங்களில், அதாவது 1-6 வாரங்களில் நடப்பதாகவே இருக்கும். எனவே, இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசி எடுத்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவனும் கிட்டதட்ட இதைக் கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். இப்போது வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் வேக்சின் போட்டு ஒரு மாதத்திற்குள் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் தான் என்றும் அதன் பிறகு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக ரெக்கார்ட் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அரிய பக்க விளைவு: மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "இந்த டிடிஎஸ் பக்கவிளைவுகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே பதிவாகியுள்ளன. பல கோடி பேருக்கு இந்த வேக்சின் போடப்பட்டதில் வெகு சிலருக்கு மட்டுமே இந்த அரிய பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்குப் பிறகு டிடிஎஸ் யாருக்காவது ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. அது குறித்து நம்மிடம் துல்லியமான தகவல்கள் இல்லை. எனவே நாம் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
பிரிட்டனில் இப்போது வரை 1.7 கோடி பேருக்கு இந்த வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 40 பேருக்கு மட்டுமே இந்த ரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த தகவல் வெளியாவது இது முதல்முறை இல்லை. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு ஆங்காங்கே சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக 2021 முதலே பல ரிப்போர்ட்கள் வெளியாகியுள்ளது.
ஆபத்து குறைவு: கொரோனா தடுப்பூசி இந்த ரத்த உறைதல் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றாலும் கூட அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மேலும் கூறுகையில், "கொரோனா பாதிப்பு ஏற்படும்போது ரத்த உறைவு பாதிப்பு அதிகம்.. அத்துடன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை கூட ஏற்படுகிறது. கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டால் இந்த ஆபத்து குறையவே செய்கிறது" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications