மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா.. இந்த ஒரே ஒரு நிகழ்வு மட்டும் ஒளிபரப்பப்படவில்லை! ஏன் தெரியுமா
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்கும் நிலையில், இந்த முடிசூட்டு விழாவில் ஒரே ஒரு நிகழ்வு மட்டும் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை.
பிரிட்டன் நாட்டின் மன்னராக சார்லஸ் இன்று முடிசூட்டிக் கொண்டார். கடந்தாண்டு அவரது தாயார் ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு சார்லஸ் மன்னரானார்.
பிரிட்டன் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக முடிசூட்டு விழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்தமாகப் பிரிட்டன் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு கோலாகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

முடிசூட்டு விழா: பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடந்த நிலையில், அதில் அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பிரிட்டன் மட்டுமின்றி உலகெங்கும் இருந்து பல கோடி பேர் கண்டு ரசித்தனர். இருப்பினும், அந்த முடிசூட்டு விழாவில் ஒரே ஒரு நிகழ்வு மட்டும் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை.
அதாவது மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அவருக்குப் புனித எண்ணெய் தேய்க்கப்பட்டது. அந்த நிகழ்வுகள் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. கேன்டர்பரி பேராயர் புனித எண்ணெய்யைக் கொண்டு அவருக்குத் தேய்த்துவிடுவார். மற்ற அனைத்து சடங்குகளும் டிவியில் ஒளிபரப்பப்படும் என்ற போதிலும், இந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை.
1950களில் ராணி எலிசபெத் முடிசூடிக் கொண்டார். அவரது முடிசூட்டு விழா தான் முதலில் முழுக்க முழுக்க டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும், அப்போதும் இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு ஒளிபரப்பப்படவில்லை. சார்லஸ் முடிசூட்டு விழாவில் இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு ஒளிபரப்பப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இருப்பினும் அது ஒளிபரப்பப்படவில்லை.

ராணி எலிசபெத்: 1953 இல் இரண்டாம் ராணி எலிசபெத் முடிசூட்டு விழாவின் போது, முடிசூட்டு சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருந்தார். இருப்பினும், எண்ணெய் தேய்க்கும் நிகழ்வின்போது மட்டும், பொதுமக்கள் பார்வையில் இருந்து அது மறைக்கும் வகையில் அட்ஜஸ்ட் செய்யப்பட்டது. இதைத் தவிர ராணி எலிசபெத் முடிசூட்டு விழா அனைத்தும் ஒளிபரப்பப்பட்டது.
இது குறித்து டைம்ஸ் இதழ் கூறுகையில், "அதன் புனிதத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுவாக அனைவரும் பார்க்கக்கூடிய தருணமாக இது ஒருபோதும் இருந்ததில்லை. இதன் காரணமாகவே இந்த முறையும் அது பொதுவெளியில் ஒளிபரப்பப்படவில்லை" என்றார்.

எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு: இந்த விழாவில் பாரம்பரியமாக பேராயர் ஆம்புல்லாவில் இருந்து புனித எண்ணெய்யை சில்வர் ஸ்பூனில் ஊற்றி தேய்த்துவிடுவார். அதைத் தொடர்ந்து அவரது உடலில் எண்ணெய் தேய்க்கப்படும். இது மிக மிகப் புனிதமான நிகழ்வு என்பதால் இந்த குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை.
கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் விலங்கில் இருந்து எடுக்கப்பட்டதாக இருந்தது. ஆனால், இந்த முறை எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பயன்படுத்தப்படும் எண்ணெய் எந்தவொரு விலங்கில் இருந்தும் எடுக்கப்பட்டது இல்லை.
இந்த எண்ணெய் எள், மல்லிகை, இலவங்கப்பட்டை, நெரோலி, பென்சாயின் மற்றும் அம்பர் மற்றும் ஆரஞ்சுப் பூக்கள் உள்ளிட்ட ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications