மனித குலம் அழிந்து போனால்.. பூமியில் எந்த உயிரினம் ஆதிக்கம் செலுத்தும்! நீங்க எதிர்பார்க்காத பதில்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மனித குலம் பூமியை மொத்தமாகத் தனது கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டது என்று சொன்னால் மிகையில்லை. அந்தளவுக்கு மொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், இது எப்போதும் நீடிக்கும் எனச் சொல்ல முடியாது. ஒருவேளை மனித குலம் மொத்தமாக அழிந்து போனால் அடுத்து எந்த உயிரினம் ஆதிக்கம் செலுத்தும் என்ற கேள்வி வரலாம். இதற்கான பதிலை ஆய்வாளர்கள் அளித்துள்ளனர்.

நமது பூமியில் கடந்த காலங்களில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்துள்ளன. ஆனால், அதில் எந்தவொரு உயிரினமும் மனிதர்களைப் போல இவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தியது இல்லை.

science world

மனிதர்கள்

இந்த உலகை நமது விருப்பத்திற்கு ஏற்பவே மாற்றி வருகிறோம் என நாம் சொல்லலாம். அந்தளவுக்குப் பூமியை மொத்தமாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு உயிரினமாக மனிதர்கள் உள்ளனர். ஆனால், அதற்காகப் பூமியில் மனிதர்கள் என்றும் நிலையாக இருப்பார்கள். மனிதர்களுக்கு அழிவே இருக்காது என நினைக்க வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மனித குலம் அழிந்தால் என்ன நடக்கும்?

பரிணாம வளர்ச்சியில் எப்போதும் ஒரு உயிரினம் தோன்றும் உச்சம் அடையும் பிறகு அழிந்து போகும். வரலாற்றைத் திருப்பி பார்த்தால் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்து வந்துள்ளது. மனிதர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க மாட்டார்கள். அதற்கேற்ப மனித குலமும் இப்போது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே தான் வாழ்கிறது. ஏஐ தொடங்கி பருவநிலை மாற்றம், விண்கற்கள் அவ்வளவு ஏன் அணுக் குண்டுகள் என மனிதர்களை மொத்தமாக அழிக்கும் பல அச்சுறுத்தல்கள் இங்கு இருக்கிறது.

எதாவது ஒரு விஷயம் எதிர்பார்க்காத வகையில் நடந்தாலும் மனித குலம் மொத்தமாக அழிந்து போகும். ஒருவேளை இதுபோல மனித குலம் மொத்தமாக அழிந்து போனால், அடுத்து எந்த உயிரினம் பூமியை ஆதிக்கம் செலுத்தும்? இது ஆய்வாளர்களிடையே நீண்ட காலமாக இருக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதிலை ஆய்வாளர்கள் நெருங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

எதிர்பார்க்காத உயிரினம்

நம்மில் பலரும் எதிர்பார்க்காத ஆக்டோபஸ் இதில் ஆதிக்கும் செலுத்தும் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடலில் வாழும் ஆக்டோபஸ் எந்தவொரு சூழலுக்கும் தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும். புத்திசாலித்தனமான உயிரினமாக அறியப்படும் ஆக்டோபஸ், பல தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளது. இதனால் மனிதர்களுக்குப் பிறகு பூமியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உயிரினமாக ஆக்டோபஸ் உருவெடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

அதன் சிக்கலான நரம்பு மண்டலம்.. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் திறன்.. புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கும் அதன் திறன் ஆகியவை ஆக்டோபஸை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

ஆக்டோபஸ்கள்

இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிம் கோல்சன் கூறுகையில், "ஆக்டோபஸ்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை.. சாமர்த்தியம், ஆர்வம் மற்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இதனால் அவை பூமியை ஆதிக்கம் செலுத்தக்கூடிய உயிரினங்களில் முன்னணியில் உள்ளன.

என்ன காரணம்

ஆக்டோபஸ்களுக்கு எது நிஜமாக இருக்கும் பொருள், எது திரையில் இருக்கும் பொருள் என்பதை வேறுபடுத்தி உணர முடியும். பல உயிரினங்களால் இதைச் செய்ய முடியாது. மேலும், புதிர்களைத் தீர்க்கும் திறனும் அதிகம். அவை சிக்கலான கருவிகளைக் கூட கையாளும். அந்தளவுக்குத் திறமையான ஒன்றாகவே ஆக்கோடபஸ் உள்ளன" என்றார். அவர் மட்டுமின்றி பல ஆய்வாளர்களும் இதையே தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது மனித குலத்தின் வெற்றிடத்தை நிரப்பக் குறிப்பிடத்தக்கத் திறன்களுடன் ஆக்டோபஸ் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

மேலும், மனித குலம் அழிந்து போகும் போது பூமி இதுபோல இருக்கும் எனச் சொல்ல முடிாது. பூமி மொத்தமாக மாறிவிடும். அப்போது எந்தவொரு உயிரினத்தாலும் மனிதர்களைப் போல மொத்தமாக கண்ட்ரோலில் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால், ஆக்கடோபஸால் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+