23 வயது பெண்.. 5 பேர் கொண்ட கும்பல்.. நாசம் செய்து.. தீவைத்து கொளுத்தி.. அதிர வைத்த உ.பி அராஜகம்
23 வயது பெண்ணை 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்
லக்னோ: 23 வயது பெண்ணை.. 5 பேர் சேர்ந்து நாசம் செய்து, தீ வைத்து கொளுத்திய கொடுமை அடுத்த அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.
தெலுங்கானா பெண் டாக்டரை எரித்து கொன்ற சம்பவமே இன்னும் நம்மை விட்டு அகலாத நிலையில், அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
நேற்று முன்தினம், பாட்னாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் கிடந்தது.. கருகிய நிலையில் அதனை போலீசார் கண்டெடுத்தனர். அந்த பெண்ணை யாரோ பலாத்காரம் செய்து, தலையில் துப்பாக்கியால் சுட்டு, அதன்பிறகு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர்.

பாலியல் கொடுமை
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்வது என்பது போய், அவர்களை கொளுத்தி தீ வைப்பது என்ற பயங்கரமும் அங்கு நடந்து வருகிறது.

5 பேர்
உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு 23 வயதுதான் இருக்கும்.. மொத்தம் 5 பேர் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.. காம வெறி அடங்கியபின் தீ வைத்தும் அவரை எரித்துள்ளனர்.. உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்த நிலையில் பெண் அலறி துடிக்க.. அவரை மீட்டு உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் லக்னோவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை
அந்த பெண்ணுக்கு 70 சதவீதம் இப்போது தீக்காயம் உள்ளது. ஆபத்தான நிலையில்தான் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.. பலாத்காரம் செய்த 5 பேர் யார் என்ற விவரம் தெரியவில்லை.. ஆனால், இந்த 5 பேரில் ஒருவன், ஏற்கனவே அதாவது போன மார்ச் மாதம் இதே பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான்.. அதற்காக ஜெயிலுக்கும் போய், ஜாமீனிலும் வந்துள்ளான்.. இதற்கு பிறகுதான் நண்பர்களை அழைத்து போய் அதே பெண்ணை சீரழித்துள்ளான்.

என்ன நடந்தது
சம்பந்தப்பட்ட பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒருவன் ரேபரேலிக்கு அழைத்துச் சென்றான். அங்கு வைத்து என்னை அவன் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தான். அதன் பின்னர் 5 பேர் கொண்ட கும்பலும் பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் தீவைத்து விட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

3 பேர் கைது
இப்போதைக்கு இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்... மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்... அடுத்தடுத்து மாநிலங்களில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதுடன், தீயையும் வைத்து எரிப்பது மக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications