பிறப்புறுப்பில் உலோக துண்டை செருகி.. கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. உயிர் ஊசல்!

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் உலோக துண்டை செருகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உபியில், சாமி கும்பிட வந்த 50 வயது பெண்ணை, கதற கதற பலாத்காரம் செய்து, பிறப்புறுப்பில் இரும்பு உலோக துண்டையும் செருகி கொன்ற சம்பவமே அடங்காத நிலையில், அதுபோலவே வேறு ஒரு சம்பவம் நடந்து மக்களை நிலை குலைய வைத்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 3 நாட்களுக்கு முன்பு 50 வயது பெண் சாமி கும்பிட இருட்டிய நேரம் கோயிலுக்குள் சென்றார்.. அப்போது நீண்ட நாட்களாகவே இந்த பெண் மீது ஒரு கண் வைத்திருந்த அந்த கோயில் பூசாரி, இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

50 year old woman gangraped in Jharkhand and victims condition critical

தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்தார்.. பிறகு ஒரு இரும்பு கம்பியை எடுத்து, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் திணித்து, சரமாரியாகவும் தாக்கி கொன்றனர். இறுதியில் அதே காரில் எடுத்து வந்து ஊருக்குள் வீசிவிட்டும் சென்றனர்.

இந்த சம்பவமே இன்னும் மக்களின் அதிர்ச்சியில் இருந்து விலகவில்லை.. அதற்குள் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. ஜார்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டம் கோப்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்த பெண்.. இவருக்கும் 50 வயதுதான்.. கணவனை இழந்த விதவை பெண். தனியாகவே அந்த கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடு புகுந்து, இந்த பெண்ணை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இறுதியில், இந்த பெண்ணின் பிறப்புறுப்பிலும் ஒரு உலோகத் துண்டை செருகி விட்டு சென்றுள்ளனர்.. அதனால், இதனால் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.. இதையடுத்து, அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்..

ஆனால், அந்த பெண் இப்போது சீரியஸாக இருக்கிறாராம்.. இந்த தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரிஷாப் ஜா விசாரணையை கையில் எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞர்களில் 2 பேர் கைதாகி உள்ளனர்.. இன்னொருவர் தப்பி விட்டார்.. அவரை தேடி வருகிறார்கள்.. இந்த 3 நாட்களில் நடந்த 2-வது சம்பவம் இது.. இரண்டுமே ஒரே மாதிரியாக உள்ளது.

பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தின் உச்சம்தான் நிர்பயா வழக்கு.. அதனால்தான் நாடே அதிர்ந்தது.. அந்த நிர்பயா குற்றவாளிகளுக்கு லேட்டானாலும், உரிய தண்டனையை வழங்கியதை அடுத்து, இதுபோன்ற வன்முறை கொடுமைகள் குறையும் என்றும் நம்பப்பட்டது.. நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டும் இன்னும் சிலர் திருந்தவில்லை என்பது தெரியவருகிறது.. இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்காவது காலதாமதம் உடனே தண்டனையை தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+