லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்களும் களத்துல இறங்குவோம்.. யோகியை போல தேர்தலை சந்திக்கும் அகிலேஷ்.. கைகொடுக்குமா திட்டம்?

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மைன்புரியின் கர்ஹால் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Akhilesh Yadavs Cheeky Reply to BJP about Aparna

    உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன.

    விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் வழக்கு.. ஹரி நாடாருக்கு பிப்.3 வரை சிறை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் வழக்கு.. ஹரி நாடாருக்கு பிப்.3 வரை சிறை

    உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.

    உத்திர பிரதேச சட்டசபை தேர்தல்

    உத்திர பிரதேச சட்டசபை தேர்தல்

    2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.

    அகிலேஷ் யாதவ் தீவிரம்

    அகிலேஷ் யாதவ் தீவிரம்

    தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வரும் நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்த போதும் எப்படியாவது மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிறுத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை வகுத்து பாஜக அமைச்சர்கள் இயக்கி வருகிறார்.

    தேர்தலில் போட்டி

    தேர்தலில் போட்டி

    ஆளும் கட்சியான பாஜகவில் இருந்து ஏராளமான அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர் இந்த நிலையில் அவரது உறவினர்கள் பாஜகவில் இணைந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை நேரடியாக சந்திப்பாரா அல்லது வழக்கம் போல மேல் சபை மூலம் தேர்வாகி முதல்வராவாரா என கேள்வி எழுப்பி நிலையில் யோகியை போலவே நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு களம் இறங்கும் முயற்சியில் இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

    கர்ஹால் தொகுதியில் போட்டி

    கர்ஹால் தொகுதியில் போட்டி

    இந்நிலையில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மைன்புரியின் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக மைன்புரி சதார், கன்னௌஜில் உள்ள சிப்ரமாவ், அசம்கரின் கோபால்பூர் மற்றும் சம்பாலின் குன்னவுர் ஆகிய இடங்களில் அகிலேஷ் தேர்தலில் போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகின தற்போதைய தகவல் உறுதியானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    English summary
    Samajwadi Party leader Akhilesh Yadav is reportedly contesting from Uttar Pradesh's Karhal constituency in the Uttar Pradesh Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X