பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படுவார்கள்! மத மாற்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் கருத்து
லக்னோ: நமது நாட்டில் கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கிடையே மதமாற்றம் தொடர்பான வழக்கில், மதமாற்ற நிகழ்வுகள் தொடர நாம் அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தியா மதச் சார்பற்ற நாடு. இங்கே பொதுமக்கள் எல்லா மதங்களைப் பின்பற்றவும் உரிமை இருக்கிறது. மேலும், ஒருவர் தனது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் உரிமையையும் சட்டமே வழங்குகிறது.

சிறுபான்மையினராக மாற்றிவிடுவார்கள்: ஆனால், ஏழை மக்களைத் தவறாக வழிநடத்தி மதமாற்றம் செய்யும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதற்கிடையே மத மாற்றங்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. மத மாற்றங்கள் நிகழ்வுகள் நாட்டில் தொடர்ந்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இருந்து இந்துக்களைக் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி அலகாபாத் ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
சட்டங்கள் தேவை: இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "இந்த போக்கை அனுமதித்தால், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக இருப்பார்கள்.. மேலும் மதமாற்றம் செய்ய நடக்கும் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்றார். மேலும், மதமாற்றம் தொடர்பாக நடக்கும் கூட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. இது போன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 25வது பிரிவில் கூறப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி மேலும் கூறுகையில், "ஒரு மதத்தைப் பிரச்சாரம் செய்யச் சட்டம் அனுமதிக்கிறது தான்.. ஆனால்,
பிரசாரம் என்பது மதத்தை வளர்ப்பதற்காக மட்டுமே.. எந்த ஒரு நபரையும் அவரது மதத்தில் இருந்து மற்ற மதத்திற்கு மாற்ற இல்லை.. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட நிகழ்வுகள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்" என்று கூறிய நீதிபதி ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தார்.
என்ன வழக்கு: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கைலாஷ் என்பவருக்கு எதிராகப் புகார் அளித்திருந்தார். கைலாஷ் தனது மனநல பாதிக்கப்பட்ட சகோதரரைச் சிகிச்சைக்கு எனக் கூறி டெல்லி அழைத்து வந்து மதம் மாற்றம் செய்துவிட்டதாகவும் தங்கள் கிராமத்திலும் பலருக்கும் மதமாற்றம் செய்து வைப்பதாகவும் புகார் அளித்தார். மதம் மாறினால் பணம் தருவதாகக் கூறி, அப்பாவி மக்களை மதம் மாற்றி வருகிறார் என்பதே புகாராகும்.
இந்த வழக்கில் கைலாஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கில் தான் அலகாபாத் நீதிமன்றம் மத மாற்ற நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கருத்து கூறியுள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications