ரூ.500 கோடி நிதி.. வேற லெவலில் மாறும் உத்தரப் பிரதேச சாலைகள்! அடித்து ஆடும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாலை போக்குவரத்தை எளிதாக்க ரூ.500 கோடி ரூபாய் மதிப்பிலான, முதல்வர் பசுமை சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "இந்த திட்டம் மாநிலத்தில் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் சாலைகளில் கூடுதல் வாகனங்களின் சுமையைக் குறைத்து, போக்குவரத்தை எளிதாக்கும். உ.பியின் மாநகரங்களில் இருக்கும் சாலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். அதேபோல நகராட்சிகளின் சாலைகளும் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி புதிய சாலைகளை உருவாக்குவது, ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகளை பராமரிப்பது மட்டுமின்றி நகர்ப்புற சாலை மேலாண்மை அமைப்பையும் நாங்கள் உருவாக்குகிறோம்.
தற்போது ரிசர்வ் வங்கி மற்றும் நிதி ஆயோக் அறிக்கையின்படி, உ.பி., முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக மாறியுள்ளது. புதிய நகர்ப்புறங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த கால ஆட்சியில் இருந்த குண்டர்களும், மாஃபியாக்களும் பாஜக ஆட்சியில் அகற்றப்பட்டிருக்கிறார்கள். நமது மாநிலம் தற்போது வளர்ச்சி பாதையில் சீராக முன்னேறிக்கொண்டிருக்கிறது. விரைவில் நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications