திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம்.. பேட்டியளித்தபோதே காங்கிரஸ் எம்பியை தட்டித்தூக்கிய போலீஸ்
லக்னோ: திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரில் உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்பி ராகேஷ் ராதோர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது உள்ளே நுழைந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பவர் ராகேஷ் ராதோர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் வந்து சேர்ந்து ராகேஷ் ராதோர் எம்பியாகி உள்ளார். அதோடு உத்தர பிரதேச மாநில காங்கிர் கட்சியின் பொது செயலாளராகவும் ராகேஷ் ராதோர் செயல்பட்டு வருகிறார்.

ராகேஷ் ராதோருக்கு இப்போது 60 வயது ஆகிறது. இந்நிலையில் தான் கடந்த 17 ம் தேதி ராகேஷ் ராதோருக்கு எதிராக பெண் ஒருவர் பரபரப்பான பாலியல் புகாரை முன்வைத்தார்.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில், ‛‛ராகேஷ் ராதோர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதோடு அரசியலிலும் நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் செல்போன் பேச்சு தொடர்பான ஆதாரங்களை அவர் வழங்கினார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பயந்து போன ராகேஷ் ராதோர் வழக்கில் முன்ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையில் காங்கிரஸ் எம்பி ராகேஷ் ராதோர் தனது இல்லத்தில் சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அங்கு வந்த போலீசார் அவரை தங்களுடன் வரும்படி அழைத்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் போலீசார் காங்கிரஸ் எம்பி ராகேஷ் ராதோரை அதிரடியாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகேஷ் ராதோரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications