Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடா! ராமர் கோவில் திறப்பை விமர்சித்த சங்கராச்சாரியார் திடீர் பல்டி.. மோடியை பற்றி இப்படி சொல்லுறாரே

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடையே இந்த கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்த்த சங்கராச்சாரியாரான அவிமுக்தேஸ்வரானந்த் புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜனவரி 22 இன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் வைத்துள்ளார்.

Ayodhya Ram Mandir inauguration: Shankaracharya Swami Avimukteshwaranand take an U turn in his statements

நரேந்திர மோடி தனது காசி வழித்தட திட்டத்திற்காக பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களை இடித்து அதில் இருந்த சிலைகளை குப்பையில் போட்டார்.

இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.

பேட்டி: அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதும், மற்றவர்கள் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்துவதும் சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. அவர்கள் (கோயில் கட்டுமானம் மற்றும் விழா அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்) இந்து மதத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகளை புறக்கணிக்கிறார்கள்.

Ayodhya Ram Mandir inauguration: Shankaracharya Swami Avimukteshwaranand take an U turn in his statements

விதி மீறல்: விதிகளை மீறிவிட்டனர். கோவிலை கட்டி முடிக்காமல் ராம பிரான் பிரதிஷ்டை விழாவை நடத்துவது இந்து மதத்தின் முதல் மீறல் ஆகும். இதற்கு "அவ்வளவு அவசரம் தேவையில்லை,".

டிசம்பர் 22, 1949 நள்ளிரவில் (பாபர் மசூதியில்) ராமர் சிலை வைக்கப்பட்டபோது அவசர நிலை ஏற்பட்டது, மேலும் 1992 இல் கட்டிடம் (பாபர் மசூதி) இடிக்கப்பட்டது. சில காரணங்களால் இந்த சம்பவங்கள் தன்னிச்சையாக நடந்தன. சூழ்நிலைகள் மற்றும் அதனால் சங்கராச்சாரிகள் யாரும் அந்த நேரத்தில் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் இன்று அப்படியொரு அவசரநிலை இல்லை. ராமர் கோயில் கட்டும் பணியை முடித்துவிட்டு பிரான் பிரதிஷ்டை செய்ய போதுமான நேரம் உள்ளது. ஆனால் அதை மீறி அவசர அவசரமாக இப்படி செய்வது பெரிய விதி மீறல் .

இப்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, முழுமையடையாத கோவிலை திறந்து வைத்து அங்கு கடவுள் சிலையை நிறுவுவது மோசமான யோசனை. ஒருவேளை அவர்கள் (நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள்) எங்களை மோடிக்கு எதிரானவர்கள் என்று அழைப்பார்கள். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அதே நேரத்தில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது, "என்று சங்கராச்சாரியாரான அவிமுக்தேஸ்வரானந்த் கூறினார்.

பல்டி அடித்தார்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடையே இந்த கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்த்த சங்கராச்சாரியாரான அவிமுக்தேஸ்வரானந்த் புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Ayodhya Ram Mandir inauguration: Shankaracharya Swami Avimukteshwaranand take an U turn in his statements

அதில், "உண்மை என்னவென்றால், பிரதமர் மோடி இந்துக்களுக்கு சுய விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார், இது சிறிய விஷயமல்ல. நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அவருடைய அபிமானிகள் என்று பொதுவெளியில் பலமுறை கூறியுள்ளோம். இதற்கு முன் மோடியைப் போல இந்துக்களை பலப்படுத்திய மற்றொரு இந்தியாவின் பிரதமரை சொல்லுங்கள். நாங்கள் பல பிரதமர்களை பெற்றுள்ளோம், அவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருந்துள்ளனர் -- நாங்கள் யாரையும் விமர்சிக்கவில்லை.

ஆனால் பிரதமர் மோடி அளவிற்கு இந்துக்களுக்கு சுய விழிப்புணர்வு யார் மூலமும் ஏற்படவில்லை. பிரிவு 370 நீக்கப்பட்டபோது, ​​அதை நாங்கள் வரவேற்கவில்லையா? குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது அதை நாம் பாராட்டவில்லையா? பிரதமர் மோடியின் ஸ்வச்தா அபியானை நாங்கள் தடுத்தோமா? அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாததையும் நாங்கள் பாராட்டினோம். இந்துக்கள் பலப்படுத்தப்படும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நரேந்திர மோடி அந்த வேலையைச் செய்கிறார்" என்று என்று சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+