தொழில் வளர்ச்சியில் டாப்! இதுதான் உத்தரப் பிரதேசத்தின் இலக்கு.. யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
லக்னோ: பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் தொழில் வளர்ச்சி மற்றும் கல்விக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதல் கட்டம் கடந்த 4ம் தேதி நடந்து முடிந்துள்ளது. அதேபோல இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தை யோகி ஆதித்தயநாத் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் பல விஷயங்கள் பாஜகவால்தான் சாத்தியமாகியுள்ளன. எனவே இந்த டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக மாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு முன்னர் இருந்த அரசு மாஃபியாக்களை வளர்த்து அதன் மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது. அதானால்தான் முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ய முடியாததை தற்போதைய ஆட்சியில் நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல மறுபுறம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மட்டுமல்லாது இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தொடக்க கல்வி குறித்து புதிய அறிவிப்பை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவு." என்று கூறியுள்ளார். 'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதைதான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.
மேலும், "கல்வி இப்படியெனில் தொழில் மற்றும் உட்டகட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாஜக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. உத்தரப் பிரதேசத்திற்காக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தற்போது ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்ப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் தொழிற்சாலைகள் அதிக அளவில் பெருகும். இந்த தொழிற்சாலைகள் இயங்க தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக கடந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிற் வளர்ச்சி காரணமாக மக்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலார்களாக செல்வது குறைக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications