தரையில் படுக்க வைக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ மனைவி.. தண்ணீரும் இல்லை, சாப்பாடும் தரல.. உலுக்கும் சம்பவம்

: பாஜக எம்எல்ஏ மனைவியை ஆஸ்பத்திரியில் தரையில் படுக்க வைத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாஜக எம்எல்ஏவின் மனைவியை ஆஸ்பத்திரியின் தரையில் ரொம்ப நேரமாக படுக்க வைத்திருக்கிறார்கள்.. குடிக்க தண்ணீரும் தரவில்லையாம்.. சரியான சாப்பாடும் தரவில்லையாம்.. ஒரு பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கே இந்த நிலைமை என்றால், தொற்று பாதித்த சாதாரண மக்கள் எங்கே போவார்கள் என்ற கவலை உத்தரபிரதேசத்தை சூழ்ந்துள்ளது..!

நாட்டில் தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.. அதிலும் உத்தரபிரதேச நிலைமை படுமோசமாகி வருகிறது.. தினந்தோறும் இந்த மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களின் லிஸ்ட்டில் உபி 4வது இடத்தில் உள்ளது.

எங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை... ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் பற்றாக்குறை இல்லை.. அனைத்து வசதிகளும் நோயாளிகளுக்கு கிடைத்து வருகிறது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே உறுதிபட தெரிவித்திருந்தார்.. ஆனால், உண்மையில் நிலைமை அப்படி அங்கு இல்லை.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

பரேலி தொகுதியில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஒருவரே உபி முதல்வருக்கு பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. இப்போது, ஃபிரோசாபாத்தின் ஜஸ்ரானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவரும், குற்றச்சாட்டுகளையும், மருத்துவமனையின் அவலத்தையும் சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அவர் பெயர் ராம்கோபால் லோதி..

சாப்பாடு

சாப்பாடு

இவரது மனைவிக்கு தொற்று பாதித்துள்ளது.. அதனால், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.. எனினும், தன் மனைவிக்கு மருத்துவமனையில் போதுமான சாப்பாடு, தண்ணீர் வழங்கப்படவில்லை என்று பகீர் குற்றச்சாட்டை அந்த வீடியோவில் சொல்லி உள்ளார்.. அத்துடன், தன்னுடைய மனைவியை 3 மணி நேரம் தரையில் படுக்கவைக்கப்பட்டதாகவும் சொல்லி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 உடல்நிலை

உடல்நிலை

இதை பற்றி அவர் சொல்லும்போது, "தொற்று பாதித்த என்னுடைய மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அங்கே செக்யூரிட்டிகளால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்.. அதற்கு பிறகு நான் ஆக்ராவின் மாவட்ட மாஜிஸ்திரேட்டை தொடர்புகொண்டு, நிலைமையை சொன்னதும், அவர் என்னுடைய மனைவிக்கு ஆஸ்பத்திரியில் பெர்மிஷன் வாங்கி தந்தார். இப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாலும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை குறித்து தகவல் என்னவென்றே தெரியவில்லை..

 சோகம்

சோகம்

மருத்துவமனையில் உள்ள யாரையும் என்னால் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.. இத்தனை நாட்களும் ஆஸ்பத்திரியிலேயே காத்திருந்து காத்திருந்து, என்னுடைய உடம்பும் பலவீனமாக இருக்கு.. இப்போதுதான் வீட்டுக்கு வந்தேன்.. மறுபடியும் ஆக்ரா வரை சென்று மனைவியை பார்க்க முடியவில்லை.." என்கிறார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

ஒரு பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்னாவது என்ற கலக்கம் மக்களை சூழ்ந்துள்ளது.. அத்துடன் யோகி அரசுக்கும் இது மேலும் களங்கத்தை தேடி தந்து வருகிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+